பக்கம்:சாமியாடிகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

211

சாமியாடிகள் 211

அப்பாவிடம் நினைத்ததைச் சொல்ல முடியாத கோலவடிவு, மொட்டை மாடிக்கு வந்தாள். அங்கே நின்றபடி நான்கு பக்கமும் கண்களைச் சுழலவிட்டாள். எங்கேயும் விபரீதமான சத்தம் கேட்கவில்லை. சுடலைமாடன் கோவில் முன்னால் மின்சார வெளிச்சத்தில் சின்னக் கூட்டம். காளியம்மன் கோயிலில் பெரிய கூட்டம். எல்லோரும் சர்வ சாதாரணமாகப் பேசிக் கொண்டுதான் இருக்காங்க. இந்த துளசிங்கம் எங்கதான் போயிருப்பாரு...? போய்ப் பார்ப்போமா. எம்மாடி காதும் காதும் வச்சது மாதிரி போமாட்டேன். எங்கம்மாவ விட்டுட்டு போவமாட்டேன். அம்மாவ விட்டுட்டுப் போனாலும் போவேனே தவிர, அப்பாவை விட்டுட்டுப் போவமாட்டேன். துளசிங்கம் மச்சான் என்னைக் கல்யாணம் பண்ணான்டாம். அவரு காலு கையி கதியா இருந்தால் போதும். ஒத்தக் காலுல நடக்காம இருந்தா அதுவே போதும்.

கோலவடிவு, அந்த மொட்டை மாடியில் எத்தனை சுற்றுச் சுற்றினாளோ, எத்தனை கிலோ மீட்டர் நடந்தாளோ. கிழக்குப் பக்கமாய் திரும்பினாள். அது என்ன லைட்டு. சிவப்பு லைட்டு. பருத்திக் காட்டுல. துளசிங்கம் மச்சானா. சொன்னபடி நிக்காரே. நேத்து சோளத்தட்டைக்குள்ள சொன்னாருல்லா. சரியா பதினொரு மணிக்கு என் விக்கி வண்டியோட நிப்பேன். சிவப்பு லைட்டக் காட்டுவேன். வாரதும் வராததும் ஒன் இஷ்டமுன்னு சொன்னாரே. போமாட்டேன். துங்கப் போறேன். இப்டி செய்தா என்ன. வாலனும், பற்குணமும், அவரை வெட்டிடப்படாதே. எதுவும் செய்துடப்படாதே பழி எங்க குடும்பத்து மேல வந்துடப்படாதே. பழி வருதோ இல்லியோ. அவருக்கு எதுவும் வரப்படாது. அவர உஷார் படுத்திட்டு வந்திருவோம். எம்மா எப்பிடி போறதாம். போனால் என்ன? ஒடியா போறோம். பழகுன தோசத்துக்கு அவருகிட்ட சொல்லிட்டுத்தான வரப் போறோம். ஒருவருக்காவ காத்திருக்கவும் படாது. காக்க வைக்கவும் படாது. இதோ. நாலு எட்டுல போய் சொல்லிட்டு ரெண்டு எட்டுல திரும்பப் போறேன். சீக்கிரமா போவணும். இல்லாட்டா.. அங்கே போயி. அவரக் கொன்னுடப் போறானுவ...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/213&oldid=1243763" இலிருந்து மீள்விக்கப்பட்டது