பக்கம்:சாமியாடிகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

சு. சமுத்திரம்

212 சு. சமுத்திரம்

கோலவடிவு படியிறங்கினாள். "எம்மா. கோவிலுக்குப் போறேன்" என்று அம்மாவிடம் சொல்லி விட்டு அவள் பதில் சொல்லுமுன்பே படி தாண்டினாள். காளியம்மன் முன்னால் நடந்தாள். அடையாளம் தெரியாமல் இருப்பதற்குத் தலையிலே முக்காடு போட்டபடி பாய்ந்தாள். சுடலைமாடன் கோவிலுக்குப் போவது போல், போய், புளியந்தோப்பில் ஒதுங்குவதுபோல் ஒதுங்கி, பருத்தித் தோட்டத்தின் கரைக்கு வந்தபோது, துளசிங்கம் விக்கி வண்டியை உருட்டிக் கொண்டு வண்டிப் பாதைக்கு வந்தான். அலங்காரியும் முக்காடு போட்டபடியே அவன் பின்னால் நின்றாள்.


24

கோலவடிவு, அவர்களைப் பார்த்து, அவசர அவசரமாய் பேசினாள். வீட்டிற்குப் போகத் தயாராய் இருப்பவள் போல், ஒரு காலை மேற்குத் திசைநோக்கி வைத்தபடியே கிழக்குப் பக்கம் நின்றவர்களைப் பார்த்து பேசினாள்.

"எனக்கு ஒடிப்போறதுல சம்மதம் இல்ல. அதுக்காக நான் வர்ல. துளசிங்கம் மச்சான வெட்டுறதுக்கு ஊருக்காரனுவ சுத்திக்கிட்டு இருக்கானுவ.. பழைய பகைய மனசுல வச்சுட்டு அரிவாளோட அலையுறானுவ... எங்கேயாவது போயி. அவரு தப்பிச்சா நல்லது. நான் வாறேன் அத்தே."

அலங்காரி, அவளை நின்று நிதானித்துப் பார்த்துவிட்டு, அழுகைக் குரலோடு பேசினாள்.

"சரிம்மா. நீ போ. நீ சொன்ன சேதி கோடி பெறும். இவன் எப்படியாவது போறான். நீ போம்மா. கூட வேணுமுன்னா துணைக்கு வரட்டுமா. போம்மா. அக்னி ராசாவுட்டயோ. எந்த ராசாவுட்டயோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/214&oldid=1243764" இலிருந்து மீள்விக்கப்பட்டது