பக்கம்:சாமியாடிகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

215

சாமியாடிகள் 215

பார்த்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையாலும், அவன் வண்டி வேகத்தை முடுக்கி விட்டான். பின்னால் உட்கார்ந்திருந்த கோலவடிவு படபடப்பாகப் பதறிப்பதறிக் கேட்டாள்.

"எனக்கு பயமாய் இருக்கு மச்சான். பயமாய் இருக்கு மச்சான் வண்டியை நிறுத்தும் மச்சான். ஒமக்குப் புண்ணியம் மச்சான். இது தப்பு மச்சான். வீட்டுக்குப் போறேன் மச்சான். அய்யோ பயமா இருக்கு. பயமா."

மரணமுற்ற கர்ப்பிணிப் பெண்-பேய்களுக்காக அமைக்கப்பட்ட சுமைதாங்கிக் கல்லைப் பிடித்தபடியே, வண்டியை நிறுத்திவிட்டு, அவள் முகத்திற்கு எதிராய் முகம் போட்டுக் கேட்டான் துளசிங்கம்.

"சரி. வண்டிய திருப்பட்டுமா..." "திருப்பும் மச்சான். திருப்பும் மச்சான். பயமா இருக்கு மச்சான்." "எதையும் பயப்பட்டு செய்யப்படாது. அப்படிச் செய்தால் அது உருப்படாது. சரி. இறங்கு வண்டிய திருப்புறேன்."

"ஆனால் நீரு ஊருக்குள்ள இருக்கப்படாது. எங்க ஆட்கள் ஒம்ம கண்டதுண்டமா வெட்டுப்பிடுவாங்க."

"நீயே என்னைவிட்டு. வெட்டிக்கிட்டு போகும்போது அவங்களே என்னை வெட்டிக் கொல்லட்டும்."

"அப்போ நான் வீட்டுக்குத் திரும்புனால், நீரு ஊர்ல இருந்துக்கிட்டு கோயில் விவகாரத்துல வம்பு பண்ணுவிரோ."

"வம்புக்கு போவ மாட்டேன். வர்ர வம்பை விடமாட்டேன். சரி இறங்கு, வண்டியைத் திருப்புறேன். ஆமா ஏன் இறங்க மாட்டக்கே..."

"பயமா இருக்கு மச்சான்.” “ஒனக்குப் பயம். எனக்கு கோபம். ரெண்டும் தீரணுமுன்னா ஊருக்குப் போறதுதான் ஒரே வழி. இறங்கு கோலம்."

"சரி. சரி. வண்டிய விடும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/217&oldid=1243767" இலிருந்து மீள்விக்கப்பட்டது