பக்கம்:சாமியாடிகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

சு. சமுத்திரம்

216 க. சமுத்திரம்

"எந்தப் பக்கமா..." "என்ன குழப்பாதயும். எந்தப் பக்கமாய் வேணுமுன்னாலும் விடும். ஒம்ம இஷ்டம்."

"அப்போ ஒனக்கு இஷ்டமில்லியா.” "ஒம்ம இஷ்டந்தான். என் இஷ்டமுன்னு இதுக்கு மேல எப்படிச் சொல்லுறதாம். ஆனாலும் பயமா இருக்கு மச்சான். எதோ செய்யத் தகாததை."

"அவனுவ ஒன்னை அக்னிராசாவுக்கு கொடுக்கது மட்டும் செய்யத் தக்கதா..? என்னை கொலை பண்ணுறதுக்காவ அரிவாள் கம்போட அலையுறது மட்டும் செய்யத்தகுமா..."

"சீக்கிரமா விடும். ஊர்ல ஆளுவ தேடி வர்றதுக்கு முன்னால போயிடலாம். எனக்கு பயமா இருக்கு மச்சான். சீக்கிரமா விடும்."

விக்கி வண்டி விரைந்து ஓடியது; ஒடுங்கிப் போய் உட்கார்ந்த கோலவடிவின் உடம்பெல்லாம் ஆடியது. அவள் உடம்பில் பெருக் கெடுத்த வேர்வை வெள்ளத்தை, அந்தப் பேய்க் காற்றாலும், துடைக்க முடியவில்லை. மோவாய், மார்பெலும்பில் முட்டும்படி கீழே விழப் போவதுபோல், இருந்த கோலத்தின் தோளில், இடது கையை அணைத்துப் போட்டபடியே துளசிங்கம் அவளுக்கு ஒரு யோசனை சொன்னான்.

"கீழ விழுந்துடப்போற கோலம். என்னைச் சேர்த்துப் பிடிச்சுக்க. இப்டி பிடிச்சுக்க. ஆமாம். இப்படித்தான். அப்புறம் இந்த மாதிரி சமயத்தில், எந்த கண்ணுலயும் ஒன் முகம் தெரியப்படாது. அதனால. ஒன் முகத்த என் முதுகுல போட்டு மறச்சுக்க அப்டி இல்ல. இப்டி.”

துளசிங்கம் அவளிடம் பேசியபடியே, அவளின் வலது கரத்தைப் பிடித்து, தனது வயிற்றோடு சேர்த்து வைத்தான். ஒரு கரத்தை வளைத்துப் போட்டான். அவன் ஒரிரு தடவை அந்தக் கையை எடுக்கப் போனபோது, அவள் தனது இடக்கையால் அவன் விரல் நுனிகளைப் பிடித்துக் கொண்டாள். பிறகு, தனது கையை, வண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/218&oldid=1243768" இலிருந்து மீள்விக்கப்பட்டது