பக்கம்:சாமியாடிகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

219

சாமியாடிகள் 219

காளியம்மாவ கும்புடுறோம். சுடல மாடன தரிசிக்கோம். நம்மள பெத்தவங்க காலுல விழுறோம்."

"நாம இங்க ஓடிவாரது தெரிஞ்சு. சட்டாம்பட்டில் இருந்து எங்க ஆளுவ வந்து ஏறுக்குமாறா எதுவும் செய்துப்படாதே மச்சான்."

"நீ சின்ன பொண்ணு. அதனால ஒனக்குத் தெரியல.. யாரும் யாரையும் பொதுவா ஊர்விட்டு ஊர் வந்து அடிக்க மாட்டாங்க. அடிக்க முடியாது. இந்த வெட்டாம்பட்டிக்குள்ள எந்த ஊர்க்காரனும் வந்து நம்மை அடிச்சா. இந்த ஊர்க்காரன் தன்னையே அடிச்சதா நெனைப்பான்."

"சரி. இந்த ஊர்க்காரனே நம்மள அடிச்சா."

'வெட்டாம்பட்டிக்காரன் அந்தப் பேருக்கு... ஏத்தபடி அடாவடிக்காரன்தான். ஆனால் காலுல விழுந்துட்டா ஒருத்தர் உயிரை எடுக்கப் போறவனும் தன்னோட உயிரையே கொடுப்பான். சரி. என்னை நல்லா பிடிச்சுக்க.. கீழே விழுந்துடப் போற."

"இதோ பிடிச்சுக்கிட்டேன். இனிமேல் நான் விழுந்தா நீரும் விழுந்துதான் ஆகணும். தெரியுமா..."

அந்த விக்கி வெட்டாம்பட்டிக்குள் வந்தபோது, நாய்கள் கூடக் குலைக்கவில்லை. அவ்வளவு பெரிய தூக்கம். ஆனாலும், துளசிங்கம் வண்டியை நிறுத்திவிட்டு, தானும் இறங்கி, கோலவடிவையும் இறக்கிவிட்டு, வண்டியை உருட்டினான். ஏன் என்பது மாதிரி கேட்கப்போன கோலவடிவின் வாயை ஆள்காட்டி விரலால் தாளிட்டான். வெட்டாம்பட்டி என்ற பெயர் விளங்கும்படி, கருவேல மரங்களான உடைக்காடும், கல்லும் பாறையுமான அகழியும் கொண்ட அந்த ஊருக்குள் ஒரு ஒரத்தில் இருந்த, ஒரு பாடாதி வீட்டைத் துளசிங்கம் தட்டினான். அந்த இருட்டில், கதவைத் தட்டுவதாக நினைத்து, துளசிங்கம் கவரைத் தட்டியபோது, கோலவடிவு அவன் கையைப் பிடித்து, கதவில் வைத்தாள். அவன் என்ன தான் தட்டினாலும், உள்ளே இருந்து எந்தக் குரலும் கேட்கவில்லை. இப்போது கோலவடிவும் சேர்ந்து தட்டினாள். கால் மணி நேரத்திற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/221&oldid=1243773" இலிருந்து மீள்விக்கப்பட்டது