பக்கம்:சாமியாடிகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

சு. சமுத்திரம்

220 சு. சமுத்திரம்

பிறகு கதவு இடுக்கில் பார்த்தால், லாந்தர் வெளிச்சம் தெரிந்தது. ஐந்து நிமிடத்திற்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. திறந்தவளுக்கு, எழுபது வயது இருக்கும். ஆனாலும், பல் விழாத பாட்டி. வெள்ளைச் சேலைக்காரி. காயப்போட்ட மொச்சை கொட்டை மாதிரி சுருங்கிப் போன முகம். அந்த மெல்லிய லாந்தர் விளக்கில், பேரனை அடையாளம் கண்டு கொண்டாள்.

"அய்யய்யோ. இது யாருடாப்பா. யாருடா..."

"பாத்தாத் தெரிய்ல. பொண்ணு. ஏன் பாட்டி இப்டி எதிர் பாக்காதது மாதிரி முழிக்கே நேத்து சாயங்காலம் இங்க மெனக்கிட்டு வந்து, ஒரு பொண்ணோட வருவேன்னு ஒன்கிட்ட சொல்லிட்டுத் தானே போனேன்."

"சொல்லத்தான் செஞ்சே. ஆனால் அதுக்கு நான் சம்மதிக்கு முன்னாலயே ஒடிட்டியே. அய்யய்யோ. இது அடாத காரியண்டா. பொண்ணு யாருப்பா..."

"நம்ம பழனிச்சாமி மாமா மகள்."

"அந்தப் பையன் ஒருத்தன்தான் ஊரிலேயே யோக்கியன். நீ நேராய் அவன் கிட்டயே பொண்ணு கேட்டிருக்கலாமேடா. நீயும் என்ன குறைஞ்சவனா..? இந்த பகவதியோட பேரனாச்சே."

"குறைஞ்சவனோ கூடுனவனோ. இப்போ எங்கள வீட்டுக்குள்ள விடு”

இற்றுப்போன அந்தக் கதவை மூடிவிட்டு, மூவரும் விட்டுக்குள் வந்தார்கள். சமையலறை குடிசை ஒன்று. அதற்கு எதித்தாற்போல, முற்றத்தைத் தாண்டிய காரைக் கட்டிடம். துளசிங்கம் திண்ணையில் ஏறியபடியே கேட்டான்.

"பெரிய வீட்டத் திற."

"ஏண்டா நீ செய்யறது ஒனக்கே நல்லா இருக்கா..? ஏம்மா. அவனுக்குத்தான் புத்தியில்ல. ஒனக்குமா. பழனிச்சாமி குடும்பம். எப்பேர்ப்பட்ட குடும்பம். கரும்பட்டையான் குடும்பமுன்னு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/222&oldid=1243775" இலிருந்து மீள்விக்கப்பட்டது