பக்கம்:சாமியாடிகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

சு. சமுத்திரம்

228 சு. சமுத்திரம்

"சரி. கத்தாத. இந்தாப்பா ராமசுப்பு. சாமியாடி சின்னய்யாவ அவளையோ எவளையோ கூப்புடாம சும்மா ஆடச் சொல்லு. சரி வா. வீட்டுக்கு போவோம்."

பழனிச்சாமி, மனைவி கையைப் பிடித்தபடி நடந்தார். பொதுவாக இரண்டடி இடைவெளியில் நடக்கும் இருவரும் அப்படி நடப்பதில் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதைப் புரிந்து கொண்ட நாட்டு வக்கீல் நாராயணனும் எழுந்தான். உடனே, இதரக் கரும்பட்டையான் பிரமுகர்களும் எழுந்து பழனிச்சாமியின் பின்னால் நடந்தார்கள். திருமலை, தாவிக் குதித்து, கூட்டத்தின் கவனத்தைக் கவர்ந்தான்.

வீட்டுக்கு வந்த பழனிச்சாமி, தேக்குக் கட்டிலில் உட்காராமல், திண்ணைப் படிக்கட்டில் உட்கார்ந்தார். அங்கே வந்த சொக்காரப் பிரமுகர்களிடம் சாதாரணமாகச் சொல்லுவது போல் சொன்னார்.

"நம்ம கோலவடிவக் காணல."

"ஒருவேளை செம்பட்டையான் போடுற சினிமாவுல."

“சீ... செத்தாலும் சாவாளே தவிர அங்க போகமாட்டாள். கரும்பட்டையான் வைராக்கியம் நம்ம பொட்டப் பிள்ளியளுக்கும் உண்டுப்பா. ஆளுக்கு ஒரு பக்கமா தேடுங்க. எங்கேயாவது செடி செத்த கடிச்சு மயங்கி கியங்கி. அழாத பாக்கியம். நாம் யாருக்கும் எந்த கெடுதியும் செய்யல. நம்ம மவளுக்கு எதுவும் வராது. சரி. தேடப் போயிருக்காங்கல்லா. பொறும்மா. பொறு."

"எப்படிப் பொறுப்பேன். எப்படித்தான் பொறுக்க முடியும். நான் பாவியிலும் மோசமான பாவி. என் காலப் பிடிச்சு தடவி விட்ட என் ராசாத்திய விரட்டிட்டேனே. விரட்."

பாக்கியம் விசும்பினாள். விம்மினாள். பருத்த உடலைத் துடிக்க வைத்தாள். முந்தானையை எடுத்து முகத்தில் படிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டாள். வீசிக் கொண்டாள். கணவனை ஆறுதலாகப் பார்த்துக் கொண்டாள். மகளைத் தேடிப் போய்த் திரும்பி வந்த ஒவ்வொருவர் பின்னாலும் கோலவடிவு திரும்பி வருவது போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/230&oldid=1243785" இலிருந்து மீள்விக்கப்பட்டது