பக்கம்:சாமியாடிகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

229

சாமியாடிகள் 229

முகந்தூக்கிப் பார்த்து, பின்னர் அவள் இல்லாத, ஏமாற்றத்தில் தலைதாழ்த்தி அழுதாள். மாந்தோப்பு, புளியந்தோப்பு, பஸ்நிலையம் என்று பல்வேறு இடங்களுக்கு சென்ற ராமகப்பு, திருமலை, மாயாண்டி போன்றவர்கள், உதடுகளைப் பிதுக்கியபடியே வந்தார்கள். பாக்கியத்தின் அழுகை கூடிக் கொண்டே இருந்தது. பேச்சியம்மா ஓடிவந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கூட்டத்தை வரவழைக்கப் போனாள். நல்ல வேளையாக சந்திரா அவளைப் பிடித்துக் கொண்டாள். அப்படியும் அந்த அடிச் சத்தம் கேட்டு, வாடாப்பூ உட்பட பல பெண்கள் வந்துவிட்டார்கள்.

திடீரென்று ஒருவர் தோளில் துண்டில்லாமல் வந்தார். அங்கிருந்த சூழலைப் புரிந்து கொண்டு ரகசியமாகக் கேட்க நினைத்ததை, பகிரங்கமாகவே கேட்டார். வெட்டாம்பட்டிக்காரர். பழனிச்சாமியின் அம்மா கூடப் பிறந்த சித்தி மகன். சிவனுப் பாண்டியன்.

"கோலவடிவு இங்க இருக்காளா..?" "என்னப்பா சொல்லுதே. சத்தமா சொல்லுதே." "கோலவடிவு இருக்காளா..?”

കെ. இல்ல. சொல்ல வேண்டியதச் சொல்லு."

"என் வீடு பகவதி வீட்டுக்குப் பக்கத்து வீடா. அதான் எலி டாக்டர் மாமியாரு வீடு. செம்பாதி வேளையில தூக்கம் கலைஞ்சது. தெரிஞ்ச குரல் மாதிரி சத்தம் கேட்டுது. அந்த வீட்டுப் பக்கமா எட்டிப் பார்த்தால் கோலவடிவு. மாதிரி. மாதிரிதான். அவள்கூட ஒங்க ஊரு உரக்கடப் பயல்."

"என்ன மனுசம்பா நீ. அப்பவே அங்கே போயி..."

"வேற பொண்ணு மாதிரி தெரிஞ்சிருந்தா போயிருப்பேன். கோலவடிவு மேல யாருக்காவது சந்தேகம் வருமா..? அதோட இந்த மாதிரி விவகாரத்துல நாலுபேரக் கலக்காமல் செய்யப்படாதே."

"ஊம ஊரைக் கெடுக்குமாம். பெருச்சாளி விட்டக் கெடுக்குமாம். ஏய் பாவி மொட்ட கெடுத்துட்டாளே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/231&oldid=1243786" இலிருந்து மீள்விக்கப்பட்டது