பக்கம்:சாமியாடிகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

சு. சமுத்திரம்

230 சு. சமுத்திரம்

"பேச்சி மயினி சும்மாக் கெட ஏல அரிவாள எடுங்கடா. துளசிங்கம் பய. நம்ம பிள்ளய கடத்திக்கிட்டு போயிருக்கான். அவளா போயிருக்க மாட்டாள். வேல்கம்ப எடுங்கல ஒண்ணு துளசிங்கம் பிணமா விழணும். இல்லன்னா நாம."

பழனிச்சாமி அங்கீகாரத்துடன், கரும்பட்டையான் இளைஞர்கள் கத்தி கம்புகளை எடுத்துக்கொண்டு நடக்கப் போனபோது

வாடாப்பூ, பழனிச்சாமியின் கால் மாட்டில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்தாள். அவர் காலை, கண்ணிரால் அலம்பியபடியே கதறினாள்.

'இப்டி வருமுன்னு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே சொல்லியிருப்பேன் பெரியப்பா. மோசம் போயிட்டோமே பெரியப்பா. மோசம் போயிட்டோமே. நம்ம கோலவடிவும், துளசிங்கமும் அலங்காரி ஒத்தாசையில் பருத்திக் காட்டுல சந்திச்சுப் பேகனதா ரஞ்சிதம் சொன்னாள். ஒரு தடவ கோலம் அலங்காரி வீட்டுக்குப் போனாளாம். இன்னைக்குத்தான் என்கிட்ட சொன்னாள். காலையிலதான்."

மாயாண்டி, பழனிச்சாமியின் கால்மாட்டில் கிடந்த தன் மகளின் தலைமுடியைப் பிடித்திழுத்து தூக்கி நிறுத்தினார். வாயிலும் வயிற்றிலும் குத்தினார்.

"செறுக்கி மவளே. நீ எனக்குப் பிறந்திருக்க மாட்டே. அப்படி இருந்தால், காலையில தெரிஞ்சத பெரியப்பா கிட்டயாவது, பெரியம்மா கிட்டயாவது உடனேயே சொல்லியிருப்பே."

"கோலவடிவ நானே திருத்திடலாமுன்னு நெனச்சேன். பெரியப்பா மனசு, தெரிஞ்சா என்ன பாடுபடுமுன்னு எனக்குத் தெரியும். கோலவடிவுகிட்ட கேட்டுட்டு. அவள் திருந்தாட்டால் அப்புறம் பெரியப்பாகிட்ட சொல்லணுமுன்னு நெனச்சேன். அய்யோ நானே அவள் ஒடிப் போவக் காரணமாயிட்டேனே."

"நீயும் ஒடிப் போழா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/232&oldid=1243787" இலிருந்து மீள்விக்கப்பட்டது