பக்கம்:சாமியாடிகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

231

சாமியாடிகள் 231

மாயாண்டி மகளை மீண்டும் அடிக்கப் போனார். பழனிச்சாமி பிடித்துக் கொண்டார். அவளை தன் பக்கமாக இழுத்து வைத்துக் கொண்டு தழுதழுத்த குரலில் கேட்டார்.

"அப்போ அவள் இஷ்டப்பட்டுத்தான் போயிருப்பா என்கிறியா..?

வாடாப்பூ பதிலளிக்கப் போனபோது, வெட்டாம்பட்டி சிவனுப்பாண்டி பதிலளித்தார்.

"கோலவடிவும் உரக்கடைப் பயலும் நின்ன தோரணையை பார்த்தால் அப்படித் தான் தெரிஞ்சுது."

பழனிச்சாமி, வேல் கம்புகளோடும், வெட்டரிவாள்களோடும் தயாராய் நின்றவர்களைக் கையாட்டி உட்காரச் சொன்னார். பிறகு, அங்கே எழுந்த ஒவ்வொருவரையும் தோளைத் தொட்டு உட்கார வைத்தார். அப்போது வெளியே அலங்காரி, துளசிங்கம் தங்கை புஷ்பத்துடன் பேசிக் கொண்டு போவது கேட்டது. சுடலைமாடன் கோயிலில் இருந்து வீட்டுக்குப் போய்க் கொண்டு இருந்தார்கள். பொழுது விடிந்தது தெரியாமல் விடிந்து, பகல் வருவது தெரியாமல் வந்துவிட்டது.

'ஏய் புஷ்பம். மணமகளே மணமகளே பாட்டு நல்லா இருந்ததுல்லா. இன்னைக்கு இப்படிப்பட்ட பாட்டாத்தான் போடணுமுன்னு ஸ்பீக்கர்காரன் கிட்ட நானே சொல்லிட்டேன். துள்ளாத துள்ளாத ஆட்டுக்குட்டி. என்கிட்ட இருக்குது சூரிக்குத்தி. நல்ல பாட்டுல்லா புஷ்பம்."

பழனிச்சாமியின் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும், அலங்காரியின் பேச்சின் தாத்பரியத்தை உள்வாங்கியபோது, திருமலை யாரும் எதிர்பாராத வகையில் வெறிபிடித்தவன் போல் வெளியே ஓடினான். அவன் காலடிச் சத்தம் நின்றபோது அலங்காரியும், புஷ்பமும் "எம்மோ எய்யோ.." என்று ஊரே அதிரும்படி அலறினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/233&oldid=1243788" இலிருந்து மீள்விக்கப்பட்டது