பக்கம்:சாமியாடிகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

சு. சமுத்திரம்




27

அலங்காரி கீழே கிடந்தாள்.

அவள் வாயிலிருந்து பல்வேறு ஒலிகள் பீறிட்டன. அந்தச் சத்தங்கள் ஓய்ந்து கொண்டே போய், இறுதியில் ஈன முனங்கலாய் முடிவு பெற்றன. மல்லாக்கக் கிடந்தவள் ஒருச்சாய்த்து படுத்தபடியே "எய்யோ என் காலு போச்சே. எய்யோ என் காலு காலு" என்று கத்தியபடியே வலது காலை, வளைக்க முடியாமல் வளைத்து, இடது கைக்குள் திணித்தபடியே கத்தினாள். அப்படியும் ஆத்திரம் அடங்காத திருமலை, அவள் இடுப்பைக் குறி வைத்து காலைத் துக்கினான். உடனே அவள், "எய்யோ. எய்யோ.." என்று அங்குமிங்குமாய் புரண்டாள். இதற்குள், துளசிங்கத்தின் தங்கை புஷ்பம் ஒரு காலில் நின்ற திருமலையை, சித்தியை விட்டு அப்புறப்படுத்துவதற்காக, லேசாகத் தள்ளினாள். அவன் அப்படியே கீழே விழுந்ததில், அவன் முட்டிக்கை அலங்காரியின் வாயில் ஊன்றியது. இப்போது அலங்காரி, "அய்யோ என் பல்லுப் போச்சே என்று அலறியபடியே ரத்தத்தைக் கொப்பளித்தாள். அவள் கழுத்தை ஆதாரமாக, பிடித்தபடியே எழுந்த திருமலை, அலங்காரியை விட்டு விட்டு, புஷ்பத்தின் கையைப் பிடித்து இழுத்தான். அவளோ, “எய்யோ.. எய்யோ.." என்று கத்தியபடியே, அவன் இழுப்புக்கு எதிர் இழுப்பாய் இழுத்தாள். ஒரு காலை, வேப்பமா வேரில், கொக்கிபோல் மாட்டிக் கொண்டே, கூப்பாடு போட்டாள். இதனால் அவளை ஒரு கையால் இழுக்க முடியாமல் போன திருமலை, இப்போது இரண்டு கைகளாலும் அவளைப் பிடித்திழுத்தான். கால் செத்தவள் போல் கிடந்த அவளை, தரதரவென்று இழுத்துக் கொண்டே வாயே தெறிக்கும்படி வைதான்.

"என் தங்கச்சிய ஒண்ணன் தேவடியா மவன். இழுத்துட்டுப் போன பிறவு நான் மட்டும் எதுக்கு கம்மா இருக்கணும்.? நீ எப்படிக் கத்தினாலும் நான் விடப் போறதுல்ல. என்கூட வந்து இருழா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/234&oldid=1243791" இலிருந்து மீள்விக்கப்பட்டது