பக்கம்:சாமியாடிகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

சு. சமுத்திரம்

238 சு. சமுத்திரம்

திருமல, புஷ்பத்த என்ன பண்ணுனானாம். ஏதோ பண்ணிபுட்டானாம். ஏடாகோடமாய். வெளில சொல்ல முடியாதபடி. கோலவடிவு, தானா போயிருக்க மாட்டாள். இந்த அலங்காரி பய மவள் மருந்து மாத்திரை போட்டு அந்தச் சின்னஞ்சிறிச, மயக்கி அனுப்பி இருப்பாள். இல்லாட்டா கோலவடிவா போறவள். சும்மாகிட ஊமை ஊரைக் கெடுக்கும். பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.

பழனிச்சாமி, இன்னும் பித்தம் தெளியாமலே நின்றார். அவரருகே, அவரது கையைப் பிடித்தபடி நின்ற பாக்கியம், கண்கள் சுருங்க கொஞ்சம் கொஞ்சமாய் மயங்கி, அவர் மார்பு வழியாக தலையைக் கீழே இறக்கி, அப்படியே குப்புற விழுந்தாள். பழனிச்சாமியோ, அப்படிப் பார்த்தும், பார்த்தது புரியாத மனோநிலையில் ஆகாயத்தை வெறித்துப் பார்த்தபடியே நின்றார். மாயாண்டியும், காத்துக் கருப்பன் பற்குணமும், பீடி ஏசெண்ட்டும், பாக்கியத்தைச் சுற்றிய கூட்டத்தை விலக்கியபடியே "காத்து வரட்டும். காத்து வரட்டும்.” என்றார்கள். பேச்சியம்மா, நாலு பேரைக் கீழே தள்ளிப் போட்டுவிட்டு முந்தானையால் பாக்கியத்திற்கு விசிறினாள். பிறகு, இவ்வளவுக்கும் காரணமான அந்த அலங்காரி, பலபட்ரயை. சும்மா விட்டுட்டு நிக்கியளே. நிக்கியளேன்னு புலம்பி, அலங்காரி பதுங்கி, பதுங்கி நின்ற திசையைக் காட்டிக் கொடுப்பதுபோல் பார்த்தாள். உடனே, ஒரு சுவரில் உடம்பைப் போட்டு, அங்குமிங்குமாய் தலையை உருட்டிய அலங்காரியை நோக்கி, மாயாண்டியும், குள்ளக் கத்தரிக்காய் ராமசாமியும் ஒடினார்கள். அதற்குள், பீடி ஏசெண்டு பால்யாண்டி சிற்சில சமயங்களில் அலங்காரியின் சேலையைப் பிடிப்பதுபோல், இவர்களின் வேட்டிகளைப் பற்றிக் கொண்டான். இனிமேல், அவர்கள் ஒடுவதாக இருந்தால், அம்மணமாகத்தான் ஒடவேண்டும்.

பாக்கியத்தின் கைகால்கள் வெட்டின. கண்கள் நிலை குத்தின. வாயில் நுரை வருவது மாதிரி இருந்தது. பழனிச்சாமி கீழே குனிந்து, அவள் தோளைத் தொட்டுத் தூக்கப் போனார். தூக்கப் போனவரும், கீழே விழுந்தார். அவள் தோளில் ஏதேச்சையாய் கைபோட்டபடியே விழுந்தார். ராமசாமி, அவரைத் தூக்கி நிறுத்தினார். மாயாண்டியும், இன்னும் சிலரும் ப்ாக்கியத்தைக் கைத்தாங்கலாக வீட்டுக்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/240&oldid=1243803" இலிருந்து மீள்விக்கப்பட்டது