பக்கம்:சாமியாடிகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

239

சாமியாடிகள் 239

கொண்டு போனார்கள். "சுக்கு வச்சு ஊதுங்கடா. சுக்கு வச்சு ஊதுங்கடா..” என்று சாமியாடித் தாத்தா தனக்கே கேட்காத குரலில் பேசிவிட்டு, பிறகு பழனிச்சாமியின் வீட்டுக்குள் ஒடினார். ஏதோ ஒரு அசரீரி போல முடிவில்லாக் குரல் ஒன்று கர்ஜித்தது.

"இதுக்குல்லாம் காரணம் அலங்காரிதான். செறுக்கி மவள கொண்டையை சிறச்சி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, தலையில மண் மூட்டய ஏத்தி உண்டு இல்லன்னு பாக்கணும்.”

இந்தப் பேச்சு ஊர்க்காதுக்கு கேட்டதோ இல்லையோ, அலங்காரிக்குக் கேட்டது. திடீரென்று, அவள் இன்னும் குன்றிப்போய் நின்ற புஷ்பத்தை நோக்கி ஓடினாள். அவள் கையைப் பிடித்து, திருமலையை விட வேகமாக இழுத்தாள். வடமேற்குப் பக்கமாக இழுத்துக் கொண்டே ஓடினாள்.

"என் பின்னால வாழா. ஒன்னை 'கற்பழிச்ச திருமலை கையில விலங்கு மாட்டி அவன நாயி மாதிரி இழுக்க வைக்கன்னா இல்லியான்னு பாரு..."



28

கோலவடிவு அந்தப் பெரிய வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். துளசிங்கத்துடன் விக்கியில் வந்த பாதி வழியிலேயே மனதை திடப்படுத்தி வைத்திருந்த அவனை, துளசிங்கம் கீழே தள்ளிப்போட்டதன் மூலம் அவள் மனதும் திரவமாக்கி விட்டது உண்மைதான். ஆனாலும் அவ்வப்போது ஜன்னல் வழியாக அவன் எட்டிப் பார்த்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. வீட்டு நினைப்பும் அடிக்கடி வந்தது. அப்போதெல்லாம் பற்களைக் கடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். மனதைக் குழப்பிக் குழப்பி, குழம்பிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/241&oldid=1243804" இலிருந்து மீள்விக்கப்பட்டது