பக்கம்:சாமியாடிகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

சு. சமுத்திரம்

240 சு. சமுத்திரம்

போய், இறுதியில் நம்மால் ஆகக்கூடியது ஏதுமில்லை என்ற ஒரு இயலாமை எண்ணம் வரும்போது, கூடவே வருமே ஒரு பெருந்துக்கம்- அது அவளையும் ஆக்கிரமித்தது. நீண்ட நெடுந்துக்கம்.

கோலவடிவைச் சூரியக் கதிர்கள் இப்போது எரிப்பதுபோல் கட்டன. அப்போது அவள் ஒரு இன்பக் கனவில் ஈடுட்டிருந்தாள். அம்மா, அவள் தலையை வாரி விடுகிறாள். "சனியனுக்கு எவ்வளவு நீள முடி பாரு..." என்ற திருமலையை "டேய் யார வேணுமுன்னாலும் பேசு. என் கோலத்த மட்டும் பேசாதே" என்கிறார் அப்பா. அவள் அப்பாவைப் பாசத்தோடு பார்த்துவிட்டு, அண்ணனை பொய் முறைப்பாய் முறைத்துவிட்டு அம்மாவின் மார்பில் அப்படியே சாய்கிறாள். இதுக்குப் பேர்தான் சொர்க்கமோ.

கோலவடிவு வீறிட்டு எழுந்தாள். "அம்மா. அம்மா." என்று கூவியபடியே தூக்கம் கலைந்து எழுந்தாள். பிறகு அந்த சூன்ய அறையை விட்டு சூன்யமாகப் பார்த்தாள். இது வெட்டாம்பட்டி வீடு. அம்மா - அப்பாவிடம் இருந்து வெட்டிக் கொண்டு வந்து தங்கியிருக்கும் வீடு.

விரிந்த தலைமுடியை உசுப்பி வைத்துக் கொண்டு, இரண்டு கைகளால் இரண்டு காதுகளையும் மூடி, முன்னங் கைகளை முன்புறமாக மடக்கி வைத்து, செய்வதறியாது பிரமையோடும், பிரமிப்போடும் இருந்த கோலவடிவு, ஒரு சத்தங்கேட்டு திடுக்கிட்டாள். லேசாய் சந்தோஷப்பட்டாள். அலங்காரி அத்தையின் சத்தம்.

கோலவடிவு கதவை உடைப்பதுபோல் திறந்து கொண்டு வெளியே வந்தபோது, அலங்காரி அத்தை முற்றத்தில் நின்றாள். அவளருகே புஷ்பம். பாட்டிக்காரி இருவரையும் ஆச்சரியமாகப் பார்த்தாள். செம்மண் கோலத்தில் அலங்காரி அத்தை ஏன் அப்படி நிற்கிறாள் என்பதோ, புஷ்பம், ஜாக்கெட் பிய்ந்துபோய் ஏன் வந்தாள் என்பதோ கோலத்திற்கு அனுமானமாகவில்லை. எதோ இயல்பாக நிற்பது போலவே நினைத்தாள். ஆனால் துளசிங்கமோ சித்தியையும், தங்கையையும் வாயகலப் பார்த்தான். பார்த்தபடியே எழுந்தான். பிறகு அவர்கள் முன்னால் போய் நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/242&oldid=1243805" இலிருந்து மீள்விக்கப்பட்டது