பக்கம்:சாமியாடிகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

சு. சமுத்திரம்

244 சு. சமுத்திரம்

அலங்காரி கற்பழிப்புக்கு விளக்கமளித்தாள்.

"இவ்வளவு நடந்த பிறவும் அவராம். அவரு. ஒனக்கு மூள இருக்குதா. புஷ்பம்! கையைப் பிடிக்கது கற்பழிச்சது மாதிரிதான். நாம. தமிழ்நாட்டுல இருக்கவங்க. மறந்துடாத"

"ஆனாலும் சித்தி நீ நடக்காததை நடந்ததாச் சொல்லியிருக்கக் கூடாது. கடைசியில புஷ்பத்திற்குத்தான் அசிங்கம்.”

"நான் என்ன இழவப்பா கண்டேன்..? அப்பிடிச் சொன்னாத்தான் திருமலையை விலங்கு போட்டு கொண்டு வர முடியுமுன்னு ஏட்டய்யா சொன்னாரு. சரி. நான்தான் சொன்னேன். இவள் ஏன் கையெழுத்துப் போடணும்."

"நான் என்னத்தைக் கண்டேன். கிறுக்கல் கிறுக்கலாய் எழுதியிருந்தாங்க... படிக்கதுக்கு முன்னாலயே அவங்களும் அவசரப்படுத்தினாங்க சிச்தியும் அவசரப்படுத்துனாள். கையெழுத்துப் போட்ட பிறகு கற்பழிப்புன்னு சொல்லுதாங்க."

"என்ன சித்தி இப்படிச் செய்துட்டே." “என்ன இழவோ செய்துட்டேன். இனும என்ன செய்யச் சொல்லுற. அப்புறம் சப்-இன்ஸ்பெக்டரு ஒன்னை கையோட கூட்டிட்டு வரச் சொன்னாரு புஷ்பமும் வரணுமாம்."

"அவங்க பார்வையே சரியில்ல. நான் போக மாட்டேன்."

"அண்ணாச்சி இருக்கும்போது எதுக்கும்மா கவலப்படுற.? எல்லாப் போலீசும் இவன் கைக்குள்ள அடக்கம். இல்லியாடா துளசிங்கம்."

துளசிங்கம் எதுவும் பேசவில்லை. வீட்டுக்குள் போய் டைட் பேண்ட்டை அவசர அவசரமாகப் போட்டான். அதுவரைக்கும் வெளியே காத்திருந்த கோலவடிவு உள்ளே போனாள். அந்தக் குழப்பத்திலும், அவளுள் ஒரு தெளிவு ஏற்பட்டது. போலிஸில் நடந்ததைச் சொல்லி அண்ணனை, மச்சானே மீட்டினால் அண்ணாவுக்குக் கோபம் தணியும். அப்புறம் அவனைச் சாட்சியாய் வச்சேரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக்கிட்டு ஊருக்குப் போகலாம். அம்மாவப் பாக்கணும். இப்பவே பாக்கணும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/246&oldid=1243809" இலிருந்து மீள்விக்கப்பட்டது