பக்கம்:சாமியாடிகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

245

சாமியாடிகள் 245

கோலவடிவு, துளசிங்கத்தை நெருங்கினாள். அவ்வளவு பேசிய அவனிடம் பேசவே தோன்றவில்லை. ஆனால் பேசித்தானே ஆகவேண்டும்.

"நானும் வாரேன் மச்சான்."

"எங்க வார?”

"ஓங்க கூடத்தான், நானும் வரப்போறேன் மச்சான். நடந்த விஷயத்த போலீஸ்ல சொல்லுவோம். அப்புறம். அண்ணாவோடயே ரிஜிஸ்டர் ஆபிசுக்குப் போவோம். புஷ்பம் அண்ணிய எங்கண்ணாவுக்கு கட்டி வச்சுடலாம். மொதல்ல போலிஸ். ரெண்டாவது ரிஜிஸ்டர் ஆபீஸ். மூணாவது ஊர். திருமலை-புஷ்பம் கல்யாணம். எல்லாத்தையும் நல்லவிதமா முடிச்சுடலாம். சரிதானே மச்சான்.”

"அப்பன் கோவணத்தோட கிடந்தானாம். மகன் இழுத்து மூடப்பான்’னு சொன்னானாம். என் தங்கையை ஒண்ணன் தேவடியா மவன். சீரழிச்சிருக்கான். அப்பா கல்லெறிக் காயத்தோட துடிக்காராம். ஒனக்கு இந்தச் சமயத்துல கல்யாணம் கேட்காக்கும். கல்யாணம். பேசாம இங்கேயே கிட இல்லன்னா எங்கேயாவது போய்த்தொலை."

துளசிங்கம் அவளைப் பாராமலே வெளியே வந்தான். எதுவுமே பிடிபடாமல் நின்ற பகவதி பாட்டி "ஏய் ஒருத்திய தொடப்படாது. தொட்டா விடப்படாதுடா" என்றாள் - பேரனின் சட்டைக் காலரை பிடித்தபடி. துளசிங்கம், கோலவடிவைப் பார்த்தபடி பாட்டிக்குப் பதிலளித்தான்.

"நீயே அவள கட்டிக்கிட்டு அழு. இப்போ எனக்கு அதைவிட வேற வேல இருக்கு. எழுந்திரு சித்தி. எழுந்திரு புஷ்பம். இன்னையோட அவங்க குளோஸ்"

துளசிங்கம், புஷ்பத்தோடும் அலங்காரியோடும் வெளியேறினான். புஷ்பமாவது கோலவடிவை பாசமாகப் பார்த்து விட்டு, பிறகு தானே

பாவப்பட்டவள்போல் போனாள். அலங்காரியோ அவளைத் திரும்பியே பார்க்கவில்லை.

கோலவடிவு, குற்றுயிரும் குறையுயிருமாய் துடித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/247&oldid=1243810" இலிருந்து மீள்விக்கப்பட்டது