பக்கம்:சாமியாடிகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

சு. சமுத்திரம்





29

சட்டாம், வெட்டாம், குட்டாம்பட்டிகள் போன்ற பல பட்டிகளுக்கு ஆதிபத்திய உரிமை கொண்ட அந்தக் காவல் நிலைய லாக்கப்பிற்குள் ஏழெட்டுப் பேர்கள் நின்றார்கள். கால்மணி நேரத்திற்கு முன்பு வரை கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்போது எதிரே சுவரோடு கவராக நின்றவனை சுதாரித்துப் பார்த்தார்கள். எத்தன கொலை செய்தானோ. இல்லன்னா இப்டியா.

காவல் நிலைய வாசல் முகப்பில் துப்பாக்கி பிடித்து நின்ற இரண்டு காவலர்களில் ஒருவர் லைட்டரைத் தூக்கி, துப்பாக்கி சுடுவது போல் சுட்டு, சிகரெட்டைக் கொளுத்த, இன்னொருத்தர் அதே வளாகத்தில் கூடிக்கூடி நின்ற கூட்டங்களில் ஒன்றை நோக்கி 'டா போட்டும் 'டி' போட்டும் கூப்பிட்டார். லாக்கப் அறைக்கு அடுத்த அறையில் நகரங்களில் இருப்பதுபோல், போக்குவரத்து, சட்டம், ஒழுங்கு, குற்றம், புலனாய்வு என்று தனித்தனி சப்-இன்ஸ் பெக்டர்கள் இல்லாமல், எல்லாமே சர்வமயமான சப்-இன்ஸ்பெக்டர் நடுத்தரம். கல்லூரியில் ரேக்கிங் செய்த அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது. டெலிபோனில் அரசினர் சுற்றுலா மாளிகை அலுவலரை விரட்டிக் கொண்டிருந்தார். "எத்தனை தடவப்பா சொல்றது. எஸ்.பி. கேம்ப் வாரார். வாரார்னு. நோ. நோ. நாலு ரூமையும் பூட்டி வை. புள்ளி விவகார அதிகாரிக்கு ரிசர்வ் செய்திருக்கா..? இடமில்லன்னு சொல்லிடு. ஆமா. நாலு ரூம்ல ஒண்ணக்கூட திறக்கப்படாது. அப்புறம் பின்னாடி என் மேல வருத்தப்பட்டு பிரயோசனமில்ல. சுற்றுலா மாளிகையில என்னெல்லாம் நடக்குன்னு எனக்குத் தெரியும். ஒன்னால. முடியுமா. முடியாதா. ஆங். அப்படி வழிக்கு வா."

ஆகமொத்தத்தில், அந்த நிலையம் காவல் நிலையமாகத் தெரியவில்லை. காவலர் நிலையமாகவே தெரிந்தது. சப்இன்ஸ்பெக்டர் சுவரில் சாய்ந்து கிடந்த திருமலையை, எஸ்.பி. வருகையின் அவசரத்தையும் மீறி, நிதானமாக, இளக்காரமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/248&oldid=1243811" இலிருந்து மீள்விக்கப்பட்டது