பக்கம்:சாமியாடிகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

249

சாமியாடிகள் 249

துளசிங்கம் முகத்தில் எந்தவிதச் சலனமும் காட்டாமல் திருமலையை யந்திர ரீதியில் பார்த்தான். லேசாகத் தலையை மட்டும் அங்கும் இங்குமிங்குமாய் ஆட்டிக் கொண்டான். அப்புறம் சப்-இன்ஸ்பெக்டரை நன்றியோடு பார்த்தான். அலங்காரிதான், அவன் முன்னால் போய் நின்று பார்த்தாள். பிறகு, "இந்தக் காலுதானே உதச்சது" என்று திருமலைக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு, சப்-இன்ஸ்பெக்டர் அறைக்கு வந்தாள். அவர் அனைவரையும் அறையப் போவதுபோல் அதட்டினார்.

"கடுமையான குற்றம் செய்கிறவங்களத்தான். அதாவது- சீரியஸ் அபென்ஸ் செய்கிறவங்களத்தான். இப்டி சுவர்ல போடுவோம். ஒங்களுக்குத் தெரியுமோ என்னமோ. ஒங்க கம்ப்ளயிண்ட் சீரியஸ். ரேப் சார்ஜ். டெட்லி சீரியஸ். ஒன் சிஸ்டர மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பணும். சீக்கிரமா கூட்டிவா."

"ஸார் வந்து"

"யோவ் கூட்டி வாரியா இல்ல.? நானே கூட்டிட்டு வரணுமா.. கூடக் கூடப் பேசுனே. எனக்குக் கோபம் வரும்."

"சும்மா இருடா துளசிங்கம். நான் போயி என் மவள கூட்டிட்டு வாறேன்."

அலங்காரி, திருமலையை அடிக்காத குறையாகக் கடந்து வெளியே போனாள். போலீஸ் கட்டிடத்திற்கு வெளியே, ஒரு ஒரமாக நின்ற புஷ்பத்தை இழுத்தாள். அவள் அங்கிழுக்க, இவள் இங்கிழுக்க, இறுதியில் வாயில் காவலர் அதட்ட, புஷ்பம் சுயமாகவே உள்ளே வந்தாள். திடீரென்று பழக்கப்பட்ட ஒரு குரல் கேட்டு நிமிர்ந்தாள். திருமலை குலுங்கிக் குலுங்கி அழுதான். சுவரிலே இருந்து கையைப் பிய்ப்பது போல், முன்னாலும் பின்னாலும் தலையை ஆட்டி ஆட்டி சுவரில் முட்டினான். ஒவ்வொரு சொல்லாகச் சொல்லி அந்த ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே அழுதழுது சொல்லி முடித்தான்.

"புஷ்பம். நானா ஒன்னைக் கற்பழிச்சேன். புஷ்பம். எனக்கு காப்பு மாட்டுனதுகூட பெரிசில்ல புஷ்பம். ஒன்னை கற்பழிச்சேன்னு பழி போடுதாங்க பாரு. அதை நெனச்சாத்தான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/251&oldid=1243814" இலிருந்து மீள்விக்கப்பட்டது