பக்கம்:சாமியாடிகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

சு. சமுத்திரம்

250 சு. சமுத்திரம்

புஷ்பம், அவன் நின்ற கோலத்தைப் பார்த்து நிலையிழந்து நின்றாள். மனதுக்குள் யாரோ சூடு போடுவது போலிருந்தது. குலுங்கிக் குலுங்கி அழும் திருமலையைப் பரிதாபமாகப் பார்த்தபடியே விம்மிவிம்மி அழுதாள். உடனே அலங்காரி, அவளைக் கைத் தாங்கலாய் அனைத்தபடி, சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் ஆஜர் படுத்தினாள். இன்னும் அந்த சப்பைப் பார்க்காமல் திருமலையையே பார்த்த புஷ்பத்தின் முகத்தை, அலங்காரி சப்-இன்ஸ்பெக்டர் பக்கமாக திருப்பிவிட்டாள். புஷ்பம் மீண்டும் மாங்கு மாங்கென்று அழுதாள். வழியில் பார்க்கும் போதெல்லாம் "என்ன பிள்ள இப்டி வெட்கப்படுறே" என்று எந்த சூதும் இல்லாமல் பேகன மனுஷன். ஏதோ கோபத்துல அப்டி நடந்திட்டாரு. அதுக்காவ இப்டியா. இப்டியா. மாட்டக்கூட இப்டி கட்டமாட்டாவளே. கூண்டுல கிளியக்கூட இப்டி அடைக்க மாட்டாவளே."

கட்டுப்படுத்த முடியாமல் அழுத புஷ்பம் ஏதோ பேசப் போனாள். அலங்காரி அவள் வாயைப் பொத்தியபடியே முறையிட்டாள்.

"பாருங்க எசமான். என் மச்சான் மவள அந்தப் பய என்ன பாடுபடுத்தி இருக்கான்னு. எப்டி அழுவுறாள் பாருங்க.."

சப்-இன்ஸ்பெக்டர், புஷ்பத்தைப் பார்த்தார். அவள் பிய்ந்த ஜாக்கெட்டைப் பார்த்தார். பார்த்தபடியே சிகரெட்டைப் பற்ற வைத்தார். அந்த பார்வையைப் பார்த்த துளசிங்கம் பயந்துவிட்டான். பம்மியபடியே பயபக்தியோடு பேசினான்.

"ஸார் தப்பா நெனக்கப்படாது. நாம கொஞ்சம் வெளில போய்." "சரி நீங்க மொதல்ல போங்க. நான் வாறேன்." துளசிங்கம், புஷ்பம், அலங்காரி முன்நடக்க, சினிமாப் பயல்கள் பின் நடக்க, திருமலையைக் கடந்து போனபோது, அந்தச் கவர்க் கைதி வீமனைப் போல் சபதமிட்டான்.

"ஜெயிச்சுட்டோம்னு நெனக்காதடா. துளசிங்கம். ஒன் மார்பப் பிளந்து ரத்தம் குடிக்காட்டா என் பேரு திருமலை இல்ல. போலீஸ் அடிச்ச ஒவ்வொரு அடிக்கும் ஒன்னை ஒவ்வொரு வெட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/252&oldid=1243816" இலிருந்து மீள்விக்கப்பட்டது