பக்கம்:சாமியாடிகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

சு. சமுத்திரம்

252 சு. சமுத்திரம்

கொடு. படம் எடுத்துட்டு சீக்கிரமா மெட்ராஸ் போகணும். ஷட்ெடிங் இருக்குது."

"வீட்ல இருக்கு. அதனால் என்ன. இங்கேயே வாங்கித் தாறேன். என் செலவிலேயே எடுங்க மாஸ்டர். ஸார். சீக்கிரமா சொல்லுங்க ஸார். சிமெண்ட் பாக்கி வசூலுக்கு போகணும். இப்போ கையில ஐயாயிரம் ரூபாய் வசூல் பணம் இருக்குது. இன்னும் ஐயாயிரம் வசூலாகனும். ஆனாலும் இப்ப ஐயாயிரம் புது நோட்டா இருக்குது. சீக்கிரமா சொல்லுங்க... ஸார். ஏதோ முன்ன பின்ன பழகாதவன்கிட்டே பேசுறது மாதிரி பேசாதீங்க ஸார். நீங்க. எந்த ஸ்டேஷன் போனாலும் நான் உங்க ஆளு ஸார்."

"சரி. ரேப் கம்ளெயிண்ட் இருந்தால்தான் திருமலைப் பயல அப்படி வைக்க முடியும். எஸ்.பி. வந்துட்டுப்போறது வரைக்கும் கம்ளெயிண்ட் லெட்டர் இருக்கட்டும். இருக்கணும். அப்புறம் பார்த்துக்கலாம். பரவாயில்லியே. காலையிலேயே ஐயாயிரம் ரூபாய் வசூலிச்சிட்டியே."

அலங்காரி, சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து நின்றாள். பின்னால் கிடந்த தலைமுடியை முன்னால் போட்டுக் கொண்டே, முத்தம் கொடுக்கப் போவதுபோல் உதடுகளைக் குவித்தாள். மயக்கப் போவதுபோல் அவரைச் சாய்த்துப் பார்த்தாள். பிறகு, பின்னலை எடுத்து மார்பில் செல்லமாய் அடித்தபடியே கொஞ்சுவது போல் பேசினாள்.

"வசூலிக்காட்டாலும் என் மகன் வீட்ல இருந்து எடுத்துட்டு வந்திருப்பான். மாதச் சம்பளக்காரங்க கஷ்டம் அவனுக்கு நல்லாவே தெரியும். அப்புறம் எசமான். இந்த திருமலைப் பயல் எப்படி மிரட்டுறான் பார்த்தியளா. இவன வெளில விட்டால் எங்களால ஊர்ல உயிரோட லாந்த முடியாது. இவன்கிட்டயும் இவன் அப்பன் பழனிச்சாமி, சித்தப்பன், மாயாண்டி, பேச்சியம்மா இவங்ககிட்டவும் எழுதி வாங்கணும். நீங்க கூப்புட்டாவது விசாரிக்கணும்."

"விசாரிக்கேன். விசாரிக்கேன். யோவ் துளசி. சிமெண்ட் பணம் மீதி ஐயாயிரமும் வசூலாயிடுமா. இன்னைக்குள்ளேயே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/254&oldid=1243818" இலிருந்து மீள்விக்கப்பட்டது