பக்கம்:சாமியாடிகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

சு. சமுத்திரம்

குதித்தார்கள். பாராசூட்டிலிருந்து குதிப்பதுபோல் குதித்த போலீஸ்காரர்களிடம் சட்டையில் அசோக முத்திரை போட்ட ஒருவர் ஏதோ சொல்ல அவர்கள் தாவிப் பாய்ந்தார்கள். கூட்டமாக நின்ற கரும்பட்டையான்களிடையே லத்தியும் கம்புமாய் பாய்ந்து போனார்கள். ஒருவர் ஜீப்பில் இருந்தபடி கத்தக் கத்த போலீஸ் லத்தி வீச்சில் நான்கைந்து காத்துக் கருப்பன்களுக்கு நல்ல அடி.

"என்னய்யா மொட்டக் கூட்டம் போடுறீங்க. அவனவன் வீட்டப் பாத்துப் போங்க. இல்லாட்டி முதுகு பிஞ்சிடும். ஏ மேன் வாயால சொன்னா போக மாட்டீங்களா?”

காத்துக்கருப்பன் கூட்டம் சிதறியது. தனித்தனியாகப் பிரிந்து வைக்கோல் குவியல்களில் பதுங்கி, வண்டிகளுக்கு பின்னால் மறைந்து நின்று, போலீஸ் மர்மங்களை மர்மமாகப் பார்த்தார்கள். பற்குணம் பற்களைக் கடித்தபடியே காண்டிராக்டர் தாமோதரன் வீட்டை நோக்கிப் போனார். அவருக்குப் பிடறியில் அடி. அவர் போலீஸையும் எதிர்க்கக்கூடியவர்தான். ஆனால் இப்போது எதிர்த்தால் முதுகு பிய்யும் என்பது தெரிந்த மனிதர்.

இதற்குள் போலீஸ்காரர்கள் பெட்டிக் கடைகளில் பீடி பற்ற வைத்தவர்களை விரட்டினார்கள்-அவர்கள் ஏதோ ஊருக்கு தீ வைக்கப் போவதுபோல், இந்த பாக்கு எத்தன பைசா என்று கேட்ட ஒருவனை, "என்னடா ஊர் விவகாரத்த பேசுற" என்று சொல்லி அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினார்கள். இரண்டு போலீஸ் காரர்கள். துளசிங்கம் கடைக்கு முன்னால் பாரா போட்டார்கள். நான்கைந்து பேர் சாலையோரமாய் இடைவெளி விட்டபடி நின்றார்கள்.

சற்று தொலைவில் வாலிபால் விளையாடிய வாலிபர்கள் பக்கம் பாய்ந்த போலிஸ் கும்பல் ஒன்று வலையை இழுத்துப் போட்டது. பந்தைத் தூக்கி ஒருவர் மேல் வீசியது. விளையாட்டுக்காரர்கள் திகைத்து நின்றபோது, 'வீட்டப் பாத்து போங்கடா." என்ற லத்தி சாட்சியான அதட்டல்கள். அந்த வாலிபக் கூட்டம் லேசான எதிர்ப்பைக்கூட காட்டாமல் கொத்தடிமைகளாய் கலைந்து போனது. ஒரு போலீஸ் பிரிவை அங்கேயே விட்டுவிட்டு, போலீஸ் ஜீப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/260&oldid=1244094" இலிருந்து மீள்விக்கப்பட்டது