பக்கம்:சாமியாடிகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

257

சாமியாடிகள் 257

"செறுக்கி மவனுவ... குதிக்கிற குதியைப் பாரு. ரெண்டு குடும்பத்தையும் அவமானப்படுத்திட்டோம் என்கிற திமுறுல குதிக்கானுவ பாரு. இவனுவள ஆட விடாப்படாதுடா. சுடலமாடன் கோவிலுல பந்தல் இருக்கப்படாதுடா..."

"இவனுவ எங்க போயிடுவானுவ மொதல்ல திருமலய மீட்டுட்டு வருவோம்."

"திருமல கிடக்கான். அவன கடிச்சா தின்னுப்புடுவாங்க. இப்போ அவன் முக்கியம் இல்ல. நம்மள அவமானப்படுத்துறது மாதிரி ஈவு இரக்கம் இல்லாம ஆடுற இந்தப் பயலுவ இன்னையோட சரியாகணும். இந்த வருஷம் எந்தக் கோவிலுக்கும் விசேஷம் வேண்டாம். வாங்கடா. ஏலே செறுக்கி மவனுவளா. வாரோண்டா. வாரோம்.”

காத்துக் கருப்பன்களில் ஒரு சிலர் தவிர ஒவ்வொருவருக்கும் செம்பட்டையான் சாமியாட்டம் சற்று அதிகமாகவே தெரிந்தது. பற்குணம் போட்ட கூச்சலில், ஒவ்வொருத்தரும் தனக்கு வருவதாக இருந்த ஒருத்தியை யாரோ ஒரு எதிரி கடத்திக்கொண்டு போய்விட்டது போலவும், அந்த எதிரியே இப்போது வீட்டுக்கு வந்து மீண்டும் பெண் கேட்டுக் கதவைத் தட்டுவது போலவும் தோன்றியது. ஒரே கூட்டமாய், சாலை மேட்டுக்கு வந்தார்கள். அங்கே இருந்த துளசிங்கம் கடைகளை ஒருசிலர் அடித்து நொறுக்கப் போனார்கள். அப்போது பலரும் அவர்களைத் தடுத்து விட்டு கூட்டத்தை சாமியாட்ட செம்பட்டையான் பக்கம் ஏவிவிடப் போனபோது -

வடதிசையில் இருந்து சத்தம் கேட்டது. அந்த சத்தத்திற்கு உருவகமாய் பூமியதிர வேன்கள் வந்தன. முன்னாலும் பின்னாலும் இரண்டு வெள்ளை வேன்கள். மேக்கப் செய்யப்பட்ட லாரிகள் மாதிரி. இவற்றிற்கு மத்தியில் ஒரு பச்சை நிற வேன். கடைசியில் ஒரு ஜீப். காத்துக் கருப்பன்கள், எங்கேயோ போகிற அந்த வண்டிகள் போகட்டும் என்பதுபோல் வழிவிட்டு நின்றபோது, அந்த நான்கு வண்டிகளும் துளசிங்கம் கடை முன்னால் நின்றன. வேனில் இருந்து துளசிங்கமும், சினிமாக்காரர்களும் வெள்ளைக் கூண்டு லாரிகளில் இருந்து போலிஸ்காரர்களும் சொல்லி வைத்ததுபோல் ஒரே சமயத்தில்

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/259&oldid=1243826" இலிருந்து மீள்விக்கப்பட்டது