பக்கம்:சாமியாடிகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

263

சாமியாடிகள் 263

"அட கடவுளே. ஊரு முழுக்க போலிஸா. நம்ம ஊருக்கா. இந்த நெலம."

"இதோட போனாக்கூட பரவாயில்லியே. இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ..."

"ஊருக்குள்ள வந்து பாரு ரஞ்சிதம். நாம பொட்டப் பிள்ளியாவது ஏதாவது சேர்ந்து செய்யணும். ஆமை போற வீடும், போலீஸ் போற ஊரும் உருப்படாது. துளசிங்கம் ரெண்டுலயுமே அவசரப்பட்டுட்டான்."

"வாரேன் ரஞ்சிதம். எங்க சித்தி. வயலுல. பம்பு செட்டுக்குள்ள பதுங்கிக் கிடக்காளான்னு பாத்துட்டு வாறேன்."

வாடாப்பூ, வயலைப் பார்த்துப் போவதற்காக திரும்பப் போனாள். அப்போது தந்தை மாயாண்டி ஒட்டமும் நடையுமாக ஓடி வருவதைப் பார்த்துவிட்டு நின்றாள். ஒருவேளை பேச்சியம்மா கிடைத்துவிட்டதைச் சொல்ல வருகிறாரோ. என்னமோ.

மகள் வாடாப்பூவையே பார்த்தபடி ஒடி வந்த மாயாண்டி, அவள் மேல் பாய்ந்தார். அவள் தலையைப் பிடித்து தன் கையில் சிக்க வைத்துக் கொண்டு, அவள் முதுகில் சரமாரியாக குத்தினார். பிறகு அவளை மல்லாக்கத் தள்ளினார். மீண்டும் அவள் தலை முடியைப் பிடித்துத் தூக்கினார். தூக்கியபடியே களைப்புத் தெரியாமல் இருக்க ஏலேலோ பாடுவது போல் மகளின் கனத்தை உணராமல் இருக்கக் கத்துவது போல், கத்தினார்.

"செறுக்கி மவளே. ஊரே இழவெடுத்து நிக்குது. நம்ம குடும்பமே செத்துப் போயிக் கிடக்குது. திருமல ஜெயிலுல இருக்கான். கோலவடிவு குரங்கு கையில அகப்பட்ட பூமாலையாயிட்டாள். பாக்கியம் மயினி மயங்கிக் கிடக்காள். நீ இங்க வந்து சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கியாக்கும். அதுவும் இவளுவகிட்ட இன்னைக்கு ஒன்ன சாவடிக்கனா இல்லியான்னு பாரு..."

மாயாண்டி, மகளின் விலாவைக் காலால் இடறினார். திடீரென்று ரஞ்சிதம் எழுந்தாள். அவளோடு நான்கைந்த பெண்களும் எழுந்தார்கள். ரஞ்சிதம் மாயாண்டியை ஒப்புக்குத் தொட்டபோது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/265&oldid=1243842" இலிருந்து மீள்விக்கப்பட்டது