பக்கம்:சாமியாடிகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

சு. சமுத்திரம்

264 க. சமுத்திரம்

அந்தப் பெண்கள் அவரை ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்து, ஒரு மரத்துப் பக்கம் கொண்டு போனார்கள். ஒவ்வொருத்தியும் அவர் உடம்பை ஊமைக்கீறலாக நகங்களால் பிராண்டினர் மாயாண்டி சத்தம் போட்டார்.

"என் மவள. நான் என்ன வேணுமுன்னாலும் செய்வேன். ஒங்களுக்கு என்னழா..?"

ரஞ்சிதம் அவரருகே போனாள். பொட்டப் பிள்ளைகளிடம் கைதிபோல் நின்ற அவரைப் பார்த்து ஆத்திரம் ஆத்திரமாகக் கேட்டாள்.

"தலைக்கு மேல. வளந்த பொண்ண இப்டி அடிக்கியே. நீ மனுஷனா?”

"ஏய். அவன் இவன்னு பேசினே."

"இதுக்கு மேல பேசினா. ஒனக்கு மரியாதி போயிடும். இவள் வயசுல ஒரு மகன் இருந்தா இப்டி அடிப்பியாய்யா? மகள்னா ஒனக்கு இளக்காரம். அதுவும் வயசுக்கு வந்த மகள். நாலு பேருக்கு முன்னால நாய அடிக்கது மாதிரி அடிக்கே. நாம துணி உடுக்கது எதுக்குய்யா. மரியாதைக்குத்தானே. சொத்து இல்லாம ஒருத்தர் வாழலாம். சுகம் இல்லாமலும் வாழலாம். ஆனால் மரியாதை இல்லாம வாழுறது ஒரு வாழ்க்கையா. வாழப்போற ஒரு பொண்ணோட மரியாதய கெடுக்கது மாதிரி அடிக்கவன் ஒரு அப்பனாயா. அப்படியே அவன் அப்பன்னாலும் அவன் ஒரு மனுஷனாய்யா, பழனிச்சாமி எப்பவாவது கோலவடிவ அடிச்சிருக்காராய்யா...? கருப்பசாமி எப்பவாவது சந்திராவை அடிச்சிருக்காரா..? ஒன் பொண்னோட மரியாதய நீயே கெடுத்த அப்புறம் யார்தான் கெடுக்க மாட்டாக..?"

"என் மவள எப்படின்னாலும் நடத்துவேன். நீ யாருழா..?"

"நானா. அவள மாதிரி ஒரு பொண்ணு, எப்போ பெத்த மகளை மாட்டை அடிக்கது மாதிரி அடிச்சியோ. அப்பவே நீ அப்பன் இல்ல. அவள் ஒனக்கு மகளும் இல்ல. இந்தப் பாவிப் பொண்ணு. ஒன்கிட்ட அடிபட்டே ஆடிப் போயிட்டாள். மகள மறந்துட்டு பேசாம போய்யா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/266&oldid=1243845" இலிருந்து மீள்விக்கப்பட்டது