பக்கம்:சாமியாடிகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

265

சாமியாடிகள் 265

திரும்பிப் பாராம ஒடுய்யா. இனிமேல் வாடாப்பூ என் வீட்லயே இருந்துக்குவாள். நீ யாரோ அவள் யாரோ. எங்க கூட பீடி சுத்தி பிழச்சுக்குவாள். நீரு மவராசனா போயி பழனிச்சாமிக்கு சேவகம் செய்யும். உட்காரு. வாடாப்பூ. இந்த மனுஷன் இனிமேல் ஒனக்கு அப்பன் இல்ல. நீ என்னோடயே இருந்துக்கலாம்."

எல்லாப் பெண்களும் வாடாப்பூவைச் சூழ்ந்து கொண்டார்கள். அவளை, புதுப்பெண்ணை உட்கார வைப்பது போல் உட்கார வைத்தார்கள். சற்று நேரத்திற்கு முன்பு சண்டை போட்ட ரோசாப்பூ அவள் கன்னங்களை முந்தானையால் துடைத்துவிட்டாள். மாயாண்டி பரபரக்க பார்த்தபடியே நின்றார். பிறகு துள்ளினார்.

"ஏழா எழுந்திருக்கியா. இல்ல. ஒரே மிதியாய் மிதிக்கட்டுமா?" "எங்க அவளத் தொடு பாக்கலாம்."

"நீயாழா. எனக்குப் பிறந்தே. அவளே சொல்லட்டும். ஏழா வாடாப்பூ எழுந்திருக்கியா இல்லியா.”

வாடாப்பூ, ரஞ்சிதத்தின் கையைப் பிடித்துக் கொண்டாள். இப்போது அவள் நினைத்துப் பார்க்கும் போது இதுவரை வாழ்ந்தது வாழ்க்கை இல்லை என்பது புரிந்தது. இந்தக் காலத்தில் எந்த பெண்ணுமே, அதுவும் விவகாரம் உள்ள பெண்கூட, அடிபடாத காலத்தில், எத்தனை வருஷமா அடிபட்டிருக்கேன். எந்த மாட்டுக்கு புல்லு வெட்டுறேனோ. அந்த மண்வெட்டிக் கணையால். எந்த மாட்ட விரட்டுறதுக்கு இருக்கோ. அந்த சாட்டைக் கம்பால அடிபட்டேன். எந்தக் கால பிடிச்சு விடுவனோ அந்தக் காலால உதைபட்டேன். இவரு அப்பனாய் இருந்தாலும் சரி. கடவுளாய் இருந்தாலும் சரி. வேண்டாய்யா. இந்த வேதனை வாழ்க்கை.

'ஏழா. வாரியா. இல்லியா..?"

"இனிமேல் ஒம்ம வாடையே வேண்டாம். நீருமாச்சு. நானுமாச்சு. என்னால தனியா பிழச்சுக்க முடியும். ஒம்ம சோலியப் பார்த்துக்கிட்டு போவும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/267&oldid=1243847" இலிருந்து மீள்விக்கப்பட்டது