பக்கம்:சாமியாடிகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

சு. சமுத்திரம்

266 சு. சமுத்திரம்

"வரமாட்டியா?" "மாட்டேன். மாட்டேன். மாட்டவே மாட்டேன். போதுமா..."

மாயாண்டி மகள் மேல் பாயவில்லை. அவளையே உற்றுப் பார்த்தார். பிறகு கண்களை மூடிக்கொண்டே யோசித்தார். யோசிக்க யோசிக்க எதுவோ தென்பட்டது. பேசாமல் அங்கேயே நின்றார். கால்களை ஒன்றுடன் ஒன்றாய் தேய்த்தபடியே நின்றார். அவர் தலை குனிந்திருந்தது. ரஞ்சிதம் சத்தம் போட்டாள்.

"இந்தாரும். ஒம்மத்தான். நீரு. ஊசிமுனையில ஒத்தக் காலுல தவம் இருந்தாலும் வாடாப்பூ. இப்போ ஒம்மகட்ட வரமாட்டா. இப்பதான் முதல் தடவயா ஒம்ம வாழ்க்கையில யோசிக்கியரு. நல்லா யோசியும். சாயங்காலமா வாரும். நாங்களும் யோசிக்கோம்."

வாடாப்பூ அப்பனைப் பார்க்காமல், குத்துக் கல்லாய் இருந்தாள். பிறகு தனது சுதந்திரத்தைப் பிரகடனப் படுத்துவதுபோல், ஒரு பீடி இலையை எடுத்து, பழுத்த பகுதியை வெட்டிவிட்டு அதை ஒரு புதுமை இலையாகக் கத்தரித்தாள். மாயாண்டி எங்கேயும் போகாமல் அங்கேயே கால்களைத் தேய்த்தபடி நின்றார்.

அப்போது அந்த சினிமா வேன் நான்கு பாய்ச்சலில் வந்தது. அதன் ஜன்னல் ஒட்டைகளில் தலைதலையாகத் தெரிந்தன. தொப்பித் தலை, மொட்டைத் தலை. டோப்பாத் தலை. சாதாரணத் தலை. பந்தயத்தில் ஒடுவதுபோல் பாய்ந்த அந்த வேன், முருகன் கோவில் பக்கம் நடைபோட்டது. முன் வரிசையில் நான்கு போலீஸ்காரர்கள் அந்தப் பெண்களைப் பற்றி தங்களுக்குத் தெரியும் என்பது போல் தலையாட்டினார்கள்.

அப்போது பின்வரிசைகளில் இருந்த சினிமாப் பையன்கள், அந்தப் பெண்களுக்கு முகம் காட்டாமல் வெளியே கைகளை நீட்டி ஆட்டினார்கள். ஹலோ ஹலோ. சுகமா என்று பாடினார்கள். 'வாரியா. வாரீயா. என்பது மாதிரி கைகளை ஆட்டினார்கள். அந்தப் பெண்கள் கோபத்தோடு எழுந்தபோது, அந்த வேன் பறந்தது. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மாயாண்டி எழுந்திரும்மா." என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/268&oldid=1243850" இலிருந்து மீள்விக்கப்பட்டது