பக்கம்:சாமியாடிகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

267

சாமியாடிகள் 267

மகளை அம்மாவாக அனுமானித்து கூப்பிடப் போனபோது, அந்த வேன் மீண்டும் பாய்ந்து வந்தது. அந்தப் பெண்களுக்கு மீண்டும் கையாட்டிவிட்டு ஊரைப் பார்த்து ஓடியது. ரோசாப்பூ கத்தினாள்.

"எங்க துளசிங்கம் சரியான அயோக்கியனா இருப்பான் போலுக்கே... அவனுக்கு நாங்கள்லாம் தங்கச்சிமாரு எங்கள பார்த்துதான் இந்தபயலுவ அப்படி கையாட்டுதாங்கன்னு துளசிங்கத்திற்குத் தெரியும். அப்படி இருந்தும், அந்தப் பயலுவளையே போலீஸ் பாதுகாப்புல அனுப்பி நம்மள கூப்பிடும்படியா செய்துட்டான்பாரு இன்னும் காரியம் ஆகணுமுன்னா எங்கள அந்தப் பயலுலகிட்ட கூட்டிக்கூட கொடுப்பான் போலுக்கே. என்ன ரஞ்சிதம் பேசாம இருக்கே..."

"நான் நினைக்கறத நல்லாவே சொல்லிட்டே ரோசாப்பூ பொதுவா வசதியுள்ளவன் தான் மட்டும் வாழறதுக்காகவே சாதி பேசுவான். உறவு பேசுவான். மற்றபடி சாதிக்காரனையோ. உறவுக் காரனையோ, வளர்க்கணுமுன்னு நெனைக்கவே மாட்டான். ஏழை உறவுக்காரன் இவங்களுக்கு அடுப்புக்கு விறகு மாதிரி. சாதிக்காரன் அடிதடிக் கத்தி மாதிரி. அதுலயும் இந்த துளசிங்கம் இருக்கானே. அவன் காரியம் ஆகணுமுன்னா நீ சொன்னதை செய்யக்கூட தயங்க மாட்டான். பாவம். கோலவடிவு."

"புஷ்பம் மட்டும் என்ன. கோலவடிவ துளசிங்கம் சீரழிச்சான். புஷ்பத்த அலங்காரி சீரழிச்சிட்டாள். கன்னி கழியாமலே அது கழிஞ்சது மாதிரி ஆயிட்டாள். சோறு தண்ணி இறங்காம படுத்த படுக்கையா கிடக்காள்."

"இவ்வளவுக்கும் காரணம் இந்த துளசிங்கம், இந்த அலங்காரி, இந்த போலிஸ்."

"திருமலையையும் இந்த மாயாண்டி மனுஷனையும் சேர்த்துக்க."

"சரி. இப்போ ஆட்கள் முக்கியமில்ல. அவங்க அட்டுழியந்தான் முக்கியம். நாம ஏதாவது செஞ்சாகனும்."

ரஞ்சிதம் முகத்தில் கையமர்த்தி, யோசித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/269&oldid=1243852" இலிருந்து மீள்விக்கப்பட்டது