பக்கம்:சாமியாடிகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

269

சாமியாடிகள் 269

நெஞ்சுக்குள் நினைக்க முடியவில்லை. வாயைத் திறக்காமல் மூச்சுவிட முடியவில்லை. இந்த உலகில் தானாய்ப் பிறந்து தானாய் வளர்ந்து தான்தோன்றியாய் போனது போன்ற பீதி. துளசிங்கம் கோரப் பற்களோடு சிரிப்பது போன்ற பிரமை, அலங்காரி, மனிதத் தலைகளை கழுத்திலும் இடுப்பிலும் தொங்கப் போட்ட நீலியாய் நிற்பது போன்ற கற்பனை.

கோலவடிவு தன்பாட்டுக்குப் பேசிக்கொண்டாள். தனது பேச்சை, தானே காதில் வாங்காததுபோல் அந்த அறைக்குள் சுற்றிச் சுற்றி வந்து பேசிக் கொண்டாள். "மாட்டிக்கிட்டேனே... வசமா மாட்டிக்கிட்டேனே. அலங்காரி என்னை ஏமாத்திட்டாளே. 'என் தங்கச்சி இந்த கோலவடிவு மாதிரியான்’னு சொல்லிட்டாரே. சொல்லிட்டாரே. எனக்கு வேணுந்தான். இன்னும் வேணுந்தான்."

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் ஒருத்தியை அவள் போக்கிலே விடவேண்டும் என்று தெரிந்திருந்த பகவதி பாட்டி, சும்மாவே இருந்தாள். மஞ்சள் வெயில் மங்கலாக அடித்தபோது, பாட்டி தட்டுத் தடுமாறி ஒரு தட்டோடு பெரிய வீட்டுக்குள் வந்தாள். கைகளால் தடவித் தடவிக் கட்டிலுக்கு வந்தாள். தட்டைத் தரையில் வைத்து விட்டு முடங்கிக் கிடந்தவளை தூக்கப் போனாள். முடியவில்லை. கோலவடிவின் உடம்பைத் தடவித் தடவிக் கைகளை முகத்தருகே கொண்டுபோய் தலையை வருடிவிட்டாள். 'அம்மா’ என்று கன்றுக்குட்டி கத்துவதுபோல் கோலவடிவு வீறிட்டு எழுந்தாள். அந்த பாட்டியை அம்மாவாக அனுமானித்து அப்படியே கட்டிக் கொண்டாள். அவள் அம்மா அல்ல என்று உணர்ந்ததும் பாட்டியை விட்டாள். ஆனால் பாட்டியோ அவளை விடவில்லை. பட்டரைச் சட்டம் போன்ற அந்த இளம் உடம்பைத் தன் பூஞ்சை உடம்பில் போட்டுத் தாங்கிக் கொண்டாள். அந்த அனுசரணையில் கோலவடிவு விம்மி வெடித்தாள். ஏதோ ஒரு சத்தம் வந்ததே தவிர, அது அழுகையா கூக்குரலா அல்லது அவலமா என்று அடையாளம் காண முடியவில்லை. பாட்டி தனக்குப் பாதியாகவும், கோலவடிவுக்குப் பாதியாகவும் சேர்த்து அழுதபடியே சொன்னாள்.

"மோசம் போயிட்டியேம்மா. மோசம் போயிட்டியே. நாடு நகரமெல்லாம் வழக்காளின்னு பேரு வாங்குன மவராசனுக்கு மவளா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/271&oldid=1243858" இலிருந்து மீள்விக்கப்பட்டது