பக்கம்:சாமியாடிகள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

சு. சமுத்திரம்

270 சு. சமுத்திரம்

பிறந்துட்டு, இப்படி பண்ணிட்டியே. அவள் அலங்காரி, பெத்த மவளேயே கூட்டிக் கொடுக்கப்போனவள். இவன் துளசிங்கம் - என் பேரன், பொண்ணுவள ஆடுமாடா நினைக்கவன்."

பாட்டி பேச்சை நிறுத்திவிட்டு கோலவடிவின் மோவாயை நிமிர்த்தினாள்.

"ஏதாவது சாப்புடும்மா. உடம்பு தாங்காதும்மா. இஷ்டம் இருக்கோ இல்லியோ எப்படியும் உயிர் போவது வரைக்கும் வாழ்ந்துதானே ஆகணும்.? இந்த ஒடம்ப வச்சுதான ஆகணும்.? ஒன் நிலம தெரிஞ்சே சாதத்தை குழைய சமைச்சேன். இந்தாம்மா சாப்புடு கொஞ்சம். கொழஞ்ச சோறுதான்."

பாட்டி, தாலாத் தட்டைத் தேடிக் கண்டுபிடித்து, ஒரு கவளத்தை எடுத்துக் கோலவடிவின் வாயருகே கொண்டு போனாள். அவளோ பாட்டி கையைப் பிடித்துக் கொண்டாள்.

"எனக்கு நஞ்சு இருந்தா கொடு பாட்டி நஞ்சு இருந்தா கொடு. இனிமே நான் வாழப்படாது."

“எத்தனையோ பொம்புளயளுக்கு யோசன சொன்னவள் நான். ஒனக்கு என்ன சொல்லன்னே தெரியலியே. வேணுமுன்னால ஒங்க அய்யாவோட சித்தி மவன் வீடு பக்கத்து வீடு, அங்க கொண்டு ஒன்ன விடட்டுமா?" -

"நான் ஒனக்குப் பாரமா போயிட்டனா பாட்டி.."

"அப்டி சொல்லாதடி என் செல்லக்குட்டி, இந்த துளசிங்கம் பய பிறந்தது இதே வீட்லதான். ஒன்னை இப்பிடி பண்ணாத கோலமுல்லாம் பண்ணுவான்னு தெரிஞ்சிருந்தா அவன் பிறந்த உடனேயே வாய்க்குள்ள நெல்ல போட்டு கொன்னுருப்பேன்."

"இப்போ என்னையாவது கொல்லு பாட்டி. நான் உலகத்துல இருக்கப்படாது."

"ஏன் இருக்கப்படாது..? அலங்காரி மாதிரி பொம்புளயளே இருக்கும்போது, நீ ஏன் இருக்கப்படாது. இப்ப எதுவுமே நடந்துடல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/272&oldid=1243861" இலிருந்து மீள்விக்கப்பட்டது