பக்கம்:சாமியாடிகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

271

சாமியாடிகள் 271

எழுந்திரு. ஒன்ன நானே பழனிச்சாமிகிட்ட கொண்டு விடுறேன். அவன் என்ன சின்னம்மான்னு கூப்பிடும்போது அம்மான்னு இவன் கூப்புடப்படாதான்னு நினைச்சவள் நான். அப்பேர்ப்பட்ட உத்தமன் அவன். நீயும் உத்தமி. பரசுராமன் அம்மா மாதிரி. லேசா தடுமாறிட்ட அவ்வளவுதான். எழுந்திரு. ஒன்னை வீட்டோட சேத்துடுறேன். முகத்த துடைழா."

"என் தலைவிதிப்படி நடக்கட்டும் பாட்டி வந்ததே வந்துட்டேன். நானாவது விசுவாசமா இருக்கேன். அதோட எந்த முகத்தோட பாட்டி போவேன். எனக்கு முகமே இல்லாமச் போச்சே பாட்டி. இல்லாமப் போச்சே."

கோலவடிவு, மீண்டும் கட்டிலில் முடங்கினாள். மல்லாந்து படுத்தாள். மஞ்சள் சூரியன் எட்டிப் பார்த்தது. அவளுக்கு இந்த வெளிச்சம் மட்டும் அல்ல, எந்த வெளிச்சமும் பிடிக்கவில்லை. கொடியில் தொங்கிய கம்பளியை எடுத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிக்கொண்டாள். உடம்பு முழுவதையும் தலையோடு சேர்த்து மறைத்துக் கொண்டாள். அவளுக்குத் தேவை வெளிச்சமல்ல. இருட்டு. கும்மிருட்டு. மையிருட்டு. எவரையும் பார்க்க முடியாத எவரும் பார்க்காத இருட்டு.

பகவதி பாட்டிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. துளசிங்கத்தை உருட்டி மிரட்டி இவளை ஒப்படைக்க வேண்டிய முறையில் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம்.

பாட்டி வெளியே வந்தாள். அந்த அறைக் கதவைச் சாத்தினாள். திண்ணையில் தூணில் சாய்ந்தாள். வயதான உணர்வுகள். சக்திக்கு மீறித் துடித்ததாலோ என்னவோ. அவள் அப்படியே சாய்ந்தாள். எவ்வளவு நேரமோ. அந்த இருட்டு வீட்டுக்குள் நேரத்தை அளக்க முடியவில்லை. திடீரென்று சத்தம் கேட்டது. கரும்பட்டையான் தர்மராசா சத்தம். சாமியாடி ரத்தினத்தின் குரல். எல்லாவற்றிற்கும் மேலாக அலங்காரியின் சத்தம்.

"பெரியம்மா எழுந்திரு சாப்பிட்டியா சாப்புடாமலே படுத்துட்டியா_?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/273&oldid=1243863" இலிருந்து மீள்விக்கப்பட்டது