பக்கம்:சாமியாடிகள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

சு. சமுத்திரம்

272 சு. சமுத்திரம்

பகவதி பாட்டி முக்கி முனங்கி எழுந்தபோது, அலங்காரி எரியாமல் கிடந்த லாந்தர் விளக்கு சிம்னியைத் துடைத்தபடியே பேசினாள்.

"ஏன் பெரியம்மா வீட்ட இருட்டுல வச்சிருக்கே வெளிச்சம் மகாலட்சுமி. அவளை அணைய வைக்கப்படாது."

"நீ இருக்கியே. பேச்சுல. வெளிச்சத்தையும், செய்கையில. இருட்டையும் வச்சிருக்கவளாச்சே."

தர்மராசா, பாட்டிக்கு உபதேசித்தான்.

"பாட்டி யாரப் பேகனாலும் பேசு. எங்க அலங்காரி சித்திய மட்டும் அப்படிப் பேசாத. ஆனானப்பட்ட கரும்பட்டையானையும் காத்துக்கருப்பனையும் ஒரே சமயத்துல தலகுணிய வச்சவள். கோலவடிவ திட்டம் போட்டே துளசிங்கத்துக்கிட்ட பிடிச்சுக் கொடுத்துக் கரும்பட்டையான் மானத்த கப்பலுல ஏத்துனவள். அடாவடித் திருமலப் பயலை இப்போ போலீஸ் ஸ்டேஷன்ல. சுவர்ல. கொக்கி போட்டு, அதுல. விலங்கும் கையுமாய் பூட்டி வச்சிருக்கு. பழனிச்சாமிய விசாரிக்க ஊருக்கு போலீஸ் போயிருக்கு. பாக்கியம் படுத்த படுக்கையா கிடக்காள். துளசிங்கம் செல்வாக்கில ஊரு முழுக்க போலிஸ் காவலு. கரும்பட்டையானுவளுக்கும், காத்துக் கருப்பனுவளுக்கும் நல்ல அடி. இப்டி. நாங்க ஊருல தலை நிமிர்ந்து நிக்கறதுக்கு எங்க அலங்காரி சித்திதான் கார்ணம்."

"நான் என்னப்பா செய்தேன். எல்லாம் சுடலைமாடன் அருள். இப்போ அவங்க குடுமியே நம்ம கைக்குள்ள என்கிறது மாதிரி ஆயிட்டு."

'இந்த தள்ளாத வயசுல என்னத்தயெல்லாம் கேட்க வேண்டியதாயிப் போச்சு. மெள்ளப் பேசு பய மவளே. பாவம் கோலவடிவு கேட்டா துடிச்சுப் போவாள்."

"சும்மா கிட பாட்டி.."

"ஏய் அலங்காரி தள்ளாத வயதுக்காரி நான். இருக்க முடியல. வந்த விஷயத்தை சட்டுப்புட்டுன்னு சொல்லிட்டுப் போங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/274&oldid=1243867" இலிருந்து மீள்விக்கப்பட்டது