பக்கம்:சாமியாடிகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

277

சாமியாடிகள் 277

சப்-இன்ஸ்பெக்டர், அலங்காரியின் கையைப் பிடித்தபடியே பதிலளிக்கப் போனார். அதைத் துளசிங்கம் பார்ப்பதைப் பார்த்த அலங்காரி, அவர் பிடியிலிருந்து லாவகமாக விடுபட்டு விலகி நின்றாள். சப்புக்கு தாபம்-கோபம். மணமகளைப் பாதுகாப்பாகக் கொண்டு வர இரண்டு கான்ஸ்டபிள்களே போதும், அவரும் வந்ததே இந்த அலங்காரிக்காகத்தான். ரொம்பத்தான் பிகு பண்ணுறாள்.

"அலங்காரி! நீ சாதாரணமா சொல்றது மாதிரி விஷயம் சின்னதுல்ல. கோலவடிவு ஒங்க பாதுகாப்புல இருந்தவள். அவள் ஒடிட்டான்னு நீங்க சொல்லலாம். ஆனால், எதிரிங்க நீங்க கொலை செய்ததா புகார் செய்யலாம். அப்போ நானும் சும்மா இருக்க முடியாது. ஒங்க ரெண்டு பேரையுமே ஒரே விலங்குல. பூட்டி ஸ்டேஷனுக்கு கொண்டு போகவேண்டியது வரும். இப்பவே கூட அரெஸ்ட் செய்யலாம். கோலவடிவ காட்டவேண்டியது ஒங்க பொறுப்பு. அண்டர்ஸ்டாண்ட். துளசி."

துளசிங்கம், எதுவும் புரியாமல் அலங்காரியைப் பார்த்தபோது, அவள், சப்-இன்ஸ்பெக்டரின் அருகே வந்தாள். அவர் இடுப்பில் தன் கரத்தைத் தற்செயலாக உரச வைப்பது போல் உரசியபடியே கெஞ்சினாள்.

"எசமான். நீங்களே எங்கள கைவிட்டா. எப்படி எசமான்? அப்படியே அந்த கரிமுடிவாள் உயிரை மாய்ச்சிருந்தாலும், எங்கள நீங்கதான் கரை சேர்க்கணும். ஒங்களத்தான் மலைபோல நம்பியிருக்கோம், நாங்க செய்த தப்பை எல்லாம் காலால உதறி கையால அணைக்கணும்."

சப்-இன்ஸ்பெக்டர், அலங்காரி சொன்னதைச் செய்தார். அவள் கால்களில் தனது கால்களை மோதவிட்டபடியே அலங்காரியின் தோளில் கூசாமல் கையைப் போட்டார். துளசிங்கம், வேறுபக்கமாகத் திரும்பிக் கொண்டான். சப்-இன்ஸ்பெக்டர் குழைந்து குழைந்து பேசினார்.

"நான் சொல்றத தப்பா. நெனக்காதீங்க. அலங்காரியம்மா. நாளைக்கே பழனிச்சாமி கோர்ட்ல மனுப்போட்டு, கோலவடிவ. ஆஜர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/279&oldid=1244088" இலிருந்து மீள்விக்கப்பட்டது