பக்கம்:சாமியாடிகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

சு. சமுத்திரம்

278 சு. சமுத்திரம்

செய்யணுமுன்னு கேட்டால் நம் எல்லோரும் மாட்டிக்குவோம். ஏற்கெனவே ரஞ்சிதம் நான் ரயில்வே பாலத்துல செக்குரிட்டி ஏற்பாட்டைப் பார்க்கப் போனப்போ துளசிங்கம் இருக்கான். கோலவடிவு எங்கேன்னு. நான். என்னமோ கோலவடிவ கூட்டிட்டுப் போனது மாதிரி கேட்டாள். சரி ஊருக்குப் போயிட்டாளோ. என்னமோ. அங்க போய் பார்க்கலாம். காரில் ஏறுங்க... என்ன ஆனாலும் சமாளிச்சுத்தானே. ஆகணும்."

துளசிங்கம், காரின் முன்னிருக்கையில் ஒதுங்கிக் கொண்டு, தர்மராசாவையும், ரத்தினத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டான். அவனுக்குப் பயம் பிறந்தது. கோலவடிவு செத்துப் போயிருப்பாளோ என்று உயிரோடு செத்துக் கொண்டிருந்தான். பின்னிருக்கையில் சப்-இன்ஸ்பெக்டரும், அவரைத் தடுக்காத அலங்காரியும் உட்கார, கார் பறந்தது. அரை மணி நேரத்தில் தார் ரோட்டில் பாய்ந்து மண்பாதையில் ஒடி பருத்திக் காட்டுப் பக்கம் வந்தபோது, வெளிச்சத்தைப் பார்த்த மேளக்காரர்கள், அடி அடி என்று அடித்து ஊது ஊதென்று ஊதித் தள்ளினார்கள். அவர்களை நெருங்கியதும், சப்-இன்ஸ்பெக்டர் அதட்டலில் மேளதாளம் நின்றதால், கோவில் மைக் போட்ட சத்தம் நன்றாகக் கேட்டது.

"ஆண் பிள்ளை என்று நிரூபித்த அண்ணன் துளசிங்கமே வருக!"

"அதற்கு ஒத்துழைத்த அண்ணி கோலவடிவே வருக!"

சப்-இன்ஸ்பெக்டர் அலங்காரியின் தோளைத் தட்டியபடியே கேட்டார்.

"என்ன உளறுறாங்க?"

"அதுவா ஸாரே. மெட்ராஸ்ல ஒரு சினிமாக்காரன் குழந்தை பெறாத முதல் பெண்டாட்டிய தள்ளி வச்சிட்டு ரெண்டாவதா ஒருத்திய கட்டி பிள்ள பெத்தானாம். அவன் ரசிகர் மன்றம் அப்போ போட்ட போஸ்டர இந்தப் பயலுவ பாராம படிச்சு ஒப்பிக்காங்க ஒரு காலத்துல ஊர்க்காரனைப் பார்த்து சினிமாக்காரன் காப்பியடிச்சான். இப்போ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/280&oldid=1244089" இலிருந்து மீள்விக்கப்பட்டது