பக்கம்:சாமியாடிகள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

279

சாமியர்டிகள் 279

சினிமாக்காரனப் பார்த்து ஊர்ப்பயலுவ காப்பியடிக்காங்க. நல்ல கூத்து."

அந்த கார் சுடலைமாடன் கோவிலுக்கு வந்தபோது, சாமியாடிகள் ஆடியபடியே காரை மொய்த்தார்கள். செம்பட்டையான்கள் வாணவேடிக்கை போட்டார்கள். சப்-இன்ஸ்பெக்டர் கார் கதவை உடைப்பது போல சாத்திவிட்டு இறங்கினார். லத்திக் கம்பைக் காட்டி எல்லோரையும் விரட்டினார். அப்படியும் ஆண்களும் பெண்களுமாய் கும்பல் கும்பலாய்க் கூடி கிசுகிசுத்தார்கள். இவர்களின் கவனத்தைக் கலைப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் "விசேஷம் அதுபாட்டுக்கு நடக்கட்டும், மைக்குல பேசுற பயல் வாயை மட்டும் மண்ணவச்சு அடைங்கப்பா" என்றபோது

வில்லுப்பாட்டாளி, "பார்வதியானவள் ஊசி முனையில் நின்று தவம் செய்து, அதனால் கிடைத்த சிவனார் வரத்தின்படி, கைலாயத்தில் வடக்குமணி வாசலில் முப்பத்திரண்டாவது தூணில் துண்டாமணி விளக்கு கடர் விளக்கைத் தூண்ட, கடலை பிறந்தான்" என்று பாடியபோது, கார்ப்பக்கம் நின்ற ரத்தினம் ஊளை யிட்டுக்கொண்டே கோயிலுக்குள் ஒடினான். அவன்தான் சுடலைமாட சாமியாடி. அந்தக் கதாநாயக சாமிக்குக் குல்லாய் போட்டார்கள். இரும்பு முள் செருப்பை மாட்டினார்கள். ரத்தினம் தங்குதங்கென்று ஆடி வடக்கே இருந்த பகவதியம்மனை ஆடும் பெண்சாமி ஒருத்தியிடம் உத்தரவு வாங்கிட்டு, மீண்டும் ஆட, உடனே எல்லாச் சாமியாடிகளும் குதித்தார்கள்.

மேளம் பீறிட்டது. நாதஸ்வரம் வீறிட்டது. பெண்களின் குலவைச் சத்தம் பந்தலை முட்டியது. கால்களைத் தூக்கி, கைகளை ஆட்டி வாய்களால் ஊளையிட்டபடி ஆடினார்கள். மேளக்காரர்களுக்கும் சாமி வந்தது. எவர் சாமியாடி, எவர் மேளக்காரர் என்று கண்டுபிடிக்க முடியாத ஆட்டம். எல்லாச் சாமியாடிகளையும் கும்பிட்டு திருநீர் வாங்கிய ஒரு செம்பட்டை, பகவதியம்மனிடம் போகவில்லை. போகக்கூடாது. பகவதியம்மா, மனைவியைப் பிடித்து ஆட்டினாலும், மனைவி மணைவிதான். கும்பிடப்படாது. எலிடாக்டர் ஒரே இடத்தில் நின்றபடி தோளை மட்டும் முறுக்கினார். மயானபுத்திரன் இவர். நேற்று மண்டையில் பட்ட கல்லெறியால் அதுக்கு மேல் ஆட முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/281&oldid=1244091" இலிருந்து மீள்விக்கப்பட்டது