பக்கம்:சாமியாடிகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

சு. சமுத்திரம்

280 சு. சமுத்திரம்

ஒரு சாமியாடி தோளில் வெட்டரிவாள். இன்னொருத்தர் கையில் பிரம்புத்தடி, ஒருவர் புண்ணாக்கு தின்ன, இன்னொருத்தர் வாழைப்பழத்தை உரிக்காமலே உள்ளே போட்டார். இவர்களுக்கு மத்தியில் கடலைமாட ரத்தினம் கற்றிச் சுற்றி வந்தான். கையிலே அரிவாளோடு குதித்தான். "டேய் என் புத்திரர்களா. பாத்தியளாடா. சுடலை மாடனோட லீலையை எதிரி கோயில எப்படி மூடிட்டேன் பார். சப்-இன்ஸ்பெக்டர் மவனே. கவலப்படாத. கோலவடிவ கண்டுபிடிச்சுத் தாரது என் பொறுப்பு. இவளை நான்தான் சில காரணத்துக்காவ மறச்சு வச்சிருக்கேன்."

சப்-இன்ஸ்பெக்டர், கோவிலை விட்டுக் கோபமாக வெளியே வந்தார். கோவிலுக்குள் சாமியாட்டத்தை ஆடியோச் சத்தத்துடன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சினிமாக்காரர்களின் கும்பிடுகளுக்கு பதில் கும்புடு போடாமலே வெளியேறினார்.

ஆங்காங்கே பாராபோட்டிருந்த போலிஸாரைக் கண்காணிப்பது போல் பார்த்துவிட்டு ஒரு வேப்பமரத்தின் பக்கமாக வந்தபோது காலடிச் சத்தம் கேட்டு திரும்பினார். அலங்காரி. அவளே, இப்போது அவரது கையை எடுத்துத் தோளிலே போட்டுக் கொண்டு கேட்டாள்.

"ஸாரே என்ன யோசிக்கியே.?"

"ரத்தினம் பயல அரெஸ்ட் பண்ணப் போறேன். இப்பவே கையுல விலங்கு மாட்டப் போறேன்."

"ஐய்யய்யோ. அப்டில்லாம் செய்யாதிய ஸாரே. என்ன விஷயம்.?"

"ஆழம் தெரியாமல் காலைவிட்டுட்டு அவஸ்தப்படுறவன் மாதிரி கோலவடிவு என்ன ஆனாளோன்னு நான் அவஸ்தப்படுறேன். சாமியாடிப்பய சும்மா ஆட வேண்டியது தானே. சுடலைமாடன் மறச்சு வச்சிருக்கதா சொன்னான். கிட்நாப்பிங்கா. அவன விடமாட்டேன்."

"என் மொகத்துக்காவ அவன விடுங்க சாமி. அவன் சரியான நெருப்புக்கோழிப் பய."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/282&oldid=1244095" இலிருந்து மீள்விக்கப்பட்டது