பக்கம்:சாமியாடிகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

287

சாமியாடிகள் 287

கொண்டிருந்தான். கோலவடிவின் அம்மா பாக்கியம், திண்ணையில் கிடந்து தலையைச் சுவரில் தேய்த்து தேய்த்து "பாவி மொட்டை கெடுத்துட்டாளே. பாவி மொட்ட தலகுணிய வச்சுட்டாளே. யாருக்கும் தல வணங்காத என் மவராசன் அதோ அடியத்து கிடக்காரே. கப்பல் போல இருந்த என் ராசா கவிந்து போய் கிடக்காரே..." என்று புலம்பினாள். அழுதழுது, அவள் முகம் வீங்கியிருந்தது. வாடாப்பூ அவள் வாயில் நீராகாரத்தை டம்ளர் விளிம்பால் உதடுகளைப் பிரித்து உட்புகுத்திக் கொண்டிருந்தாள். அந்தத் தாயைச் "சாப்பிடு. பெரியம்மா.. என். கண்ணுல்ல." என்று சொல்லிச் சொல்லிக் குழந்தைக்கு ஊட்டுவது போல் ஊட்டிக் கொண்டிருந்தாள். ஆனாலும், வலுக்கட்டாயமாக வாய்க்குள் போன நீராகாரத்தை பாக்கியம் துப்பினாள். பிறகு அப்படியே பேச்சற்று மூச்சற்றுச் சாய்ந்தாள். திக்கற்றுக் கிடந்த பழனிச்சாமியையும் பாக்கியத்தையும் பார்த்துவிட்டு பலர் அழுது விட்டார்கள்.

நள்ளிரவில், சுடலைமாடசாமி பருத்திக் காட்டிற்குத் தீப்பந்தத்துடன் வேட்டை'க்குப் போய்விட்டு வந்து விட்டார். மேளத்திற்குப் பிறகு ஆடிய ரிக்கார்ட் டான்ஸம்மா மேடையிலேயே மேக்கப்பை கலைத்துக் கொண்டிருந்தாள். கூட்டம் சிறிது சிறிதாகச் சிறுத்துக் கொண்டிருந்தது. கதிரவனும் கண் விழித்தான்.

திடீரென்று பழனிச்சாமி வீட்டு முகப்பில் பழைய காலத்துத் துப்பாக்கியோடு ஒரு கான்ஸ்டபிள் தோன்றினார்.

"யாரும்மா. பாக்கியம்."

நாட்டு வக்கீல் நாராயணன் பதிலளித்தான்.

"அதோ புலம்பிக்கிட்டு இருக்காவளே. அந்தம்மா."

"யாருவே பழனிச்சாமி."

"அதோ யானை சேத்துல சிக்குணமாதிரி கட்டிலிலே கிடக்காரே, அவருதான். என்ன விஷயம்?"

"யாருவே பேச்சியம்மா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/289&oldid=1244108" இலிருந்து மீள்விக்கப்பட்டது