பக்கம்:சாமியாடிகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

சு. சமுத்திரம்

35

சுடலைமாடன் கோவில் சுறுசுறுப்பாய் இயங்கியபோது, காளியம்மா கோவில் மூடிக்கிடந்தது. அரைகுறை பந்தலுடன், மொட்டையான சப்பரத்துடன் அந்தக் கோயில் இருளில் மூழ்கிப் போனது. இவ்வளவு பெரிய அவமானத்தைத் தந்த காளியாத்தாவிற்கு இந்த வருஷம் இல்லை, எந்த வருஷமும் கொடை தேவையில்லை என்று கரும்பட்டையான்கள் தீர்மானித்தார்கள். திறந்து கிடந்த அம்மன் கோவிலை மூடப் போனால் அம்மனைப் பார்க்க வேண்டியதிருக்கும் என்று நினைத்து, அவள் முகத்தில் விழிக்க விரும்பாதவர்கள் போல் அப்படியே விட்டுவிட்டார்கள். சிலர் காளியம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள்.

கோலவடிவின் தந்தை பழனிச்சாமி வீட்டிலே.

எல்லாமே தலைகீழாகக் கிடந்தன. தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளுக்கு யாரும் தண்ணி காட்டவில்லை. அவை "ம்மா. ம்மா" என்று கத்தின. தொட்டியில் போட வேண்டிய புண்ணாக்கு திண்ணையில் திட்டாகக் கிடந்தது. வீடு பெருக்கப்படாமல் குப்பையும் கூளமுமாகக் கிடந்தது. சேலை துணிமணிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடந்தன. அடுப்பிலே தூசித் திட்டுக்கள். அம்மியிலோ பல்லிகள் பாச்சானைப் பிடித்துக் கொண்டிருந்தன.

இதேபோல், அந்த வீட்டு ஆட்களும் அப்படித்தான். பழனிச்சாமி, கட்டிலில் சோர்ந்து போய்க் கிடந்தார். அவர் முன்னால் சிதறிக் கிடந்த கரும்பட்டையான் பங்காளிகளைப் பரக்கப் பரக்கப் பார்த்தார். அவர் கண்கள், அவர்களைப் பார்ப்பது போல் எங்கேயோ பார்த்தன. அடிக்கடி தன்னையறியாமலேயே வயிற்றைத் தடவி விட்டார். மாயாண்டி ஒரு அரிவாளைக் கூர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஏதாவது செய்துவிடக் கூடாது என்பதற்காக நாட்டு வக்கீல் "அரிவாளைக் கீழே போடும். போடும்..” என்று நச்சரித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/288&oldid=1244106" இலிருந்து மீள்விக்கப்பட்டது