பக்கம்:சாமியாடிகள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

293

293

சந்திரா, கோலவடிவை இழுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். அவள் முதுகின் ஆதரவோடு வந்த கோலவடிவு, சட்டென்று முற்றத்தில் நிலைகுலைந்து விழுந்தாள். முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டு, குப்புறக் கிடந்தாள். எவரும் கண்டு கொள்ளாத ஏணிப் படிக் கட்டுக்குள் கிடந்த பேச்சியம்மா, கோலவடிவின் முன்னால் வந்து மாரடித்தாள்.

"பாவி கெடுத்திட்டியே. பாவி. கெடுத்தியேடி. ஒன்னால நாங்க சின்னாபின்னப்பட்டு நிக்கோமே. இதுக்குல்லாம் காரணம் இந்த பாவி மொட்ட வாடாப்பூதான். இவள் மட்டும் சொல்லியிருந்தால்."

மாயாண்டி, பேச்சியம்மாவை மடக்கப் போனார். வாடாப்பூவை எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி, கூட்டி வந்தாச்சு. பழையபடியும் அவள் ரஞ்சிதம் கிட்ட போயிடப்படாதே.

"இந்தா பாரு. பேச்சி. என்ன பேச்சு பேசுறே. என் மகளாவது சொன்னாள். ஒன் மகள் சொல்லியிருக்கக்கூட மாட்டாள். ஏழா. கோலவடிவு. எங்கள பண்ணாத கோலமெல்லாம் பண்ணிட்டியளா. பாவி..."

மாயாண்டியையும் பேச்சியம்மாவையும் யாரோ அதட்டினார்கள். பிறகு பழனிச்சாமியையும், கோலவடிவையும் மாறி மாறிப் பார்த்தார்கள். கோலவடிவோ தன்னைப் பார்த்த சொக்காரர்களைப் பார்க்காமல், எதுவும் நடக்காதது போலவும், அவள் அங்கே செல்லாதது போலவும், சாய்வு நாற்காலியில் கிடந்த தந்தையை, கீழே கிடந்தபடியே ஏறிட்டுப் பார்த்தாள். உதடுகள் திறந்தன. பற்கள் விலகின.

'அப்பா. அப்பா.. என்னை செல்லமா. வளத்து சீராட்டுன அப்பாவே... எப்போ அந்த துளசிங்கம் ஒம்ம அவமானப் படுத்துறதுக்காவத்தான் என்னை கூட்டிட்டுப் போனான்னு தெரிஞ்சுதோ. அப்பவே நான் பழையபடியும் ஒம்ம மகளாயிட்டேம்பா. எப்போ அண்ணனை போலீஸ் அடச்சு, சித்தரவதை செய்யுறதுக்கு ஏற்பாடு செய்தானோ, அப்பவே நான் அண்ணனுக்கு தங்கச்சியாயிட்டேன். அப்பா.. எந்த உடம்போட போனனோ அந்த உடம்புல எந்த வில்லங்கமும் இல்லாமத் திரும்பி வந்துட்டேம்பா. நடந்ததை எல்லாம் போலிஸ்ல சொல்லி இந்த துளசிங்கத்துக்கும், அலங்காரிக்கும் பத்து வருஷமாவது ஜெயில் வாங்கிக் கொடுக்கணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/295&oldid=1244154" இலிருந்து மீள்விக்கப்பட்டது