பக்கம்:சாமியாடிகள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

சு. சமுத்திரம்

292 சு. சமுத்திரம்

இடுப்பைக் கிள்ளினார்கள். சப்-இன்ஸ்பெக்டர் முன்னால் வந்து நின்ற ரஞ்சிதம் கோபாவேசப்பட்ட பீடி பெண்களைத் தடுத்து நிறுத்தினாள். அதற்குள் எதுவும் தெரியாத அப்பாவி போலவும் சற்றுத் தள்ளி நின்ற ஆயுதப் போலீஸ் சப் - இ ன் ஸ்பெக்டர் ஒரு வர் சப்-இன்ஸ்பெக்டருக்கு கேடயமாக நின்றபடியே கெஞ்சினார்.

"நான் சொல்லுறதை தயவுசெய்து கேளுங்க... இந்த சப்-இன்ஸ்பெக்டர் நடந்துகிட்ட முறை தப்புத்தான். இந்த ஒரு நாளிலேயே ஊர் நிலையை புரிஞ்சிக்கிட்டேன். ஏதோ நடந்தது நடந்து போச்சு. அதை இனிமேல் மாத்த முடியாது. திருமலையை உடனே விடுதலை செய்ய ஏற்பாடு செய்யுறேன். நாங்களும் ஊரை விட்டு ஒடிப் போயிடுறோம். ஆனால் அதுக்கு நீங்க அமைதி காக்கணும். ஒங்க விவகாரத்தை நீங்களே தீர்ப்பதாய் உறுதி சொல்லணும்."

காண்டிராக்டர் தாமோதரன் உறுதி சொன்னார்.

"எங்க விவகாரத்த நாங்களே தீர்த்துக்கிடுறோம் ஸார். அதுக்குன்னு ஒரு பிளான் வச்சிருக்கேன் ஸார். நீங்க எல்லாரும் பொறுமையா என் வீட்ல சாப்பிட்டுட்டு போங்க ஸார். அதுக்குள்ள கோலவடிவையும் கண்டு பிடிச்சுடுங்க ஸார்."

போலீஸ் கூட்டமும், ஊர்க் கூட்டமும் சிறுகச் சிறுகக் கலைந்தது. வீறாப்பாய் நிற்பது போல் நின்ற சாதாரண சப்-இன்ஸ்பெக்டரை, ஆயுத சப்-இன்ஸ்பெக்டர் இழுத்துக் கொண்டு போனார்.

36

திடீரென்று, கட்டை வண்டிப் பக்கம் போன சந்திரா, கூக் குரலிட்டாள்.

"இங்கே யார் இருக்கான்னு பாருங்க. எக்கா. எக்கா. எப்பக்கா வந்தே? இப்டி பண்ணிட்டியே. அக்கா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/294&oldid=1244145" இலிருந்து மீள்விக்கப்பட்டது