பக்கம்:சாமியாடிகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

சு. சமுத்திரம்

296 சு. சமுத்திரம்

கோலவடிவு, அப்பா நின்ற திசை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள். ஆனால் பழனிச்சாமி கும்பிட்ட அவள் கைகளை ஒரு சேரப் பிடித்து, அவளைச் செந்தூக்காகத் தூக்கினார். அவள் கீழே உட்காரப் போனாள். அவர், அவளை அப்படியே மேலே இழுத்துப் பிடிக்க, அவள் சிறிது நேரம் அந்தரத்தில் தொங்கினாள். தந்தை, அவளை அப்படியே தூக்கிக் கொண்டு சிறிது நடந்தார். அவள் ‘எப்பா. எப்பா." என்று பரிதாபமாய் குரலிட்டதும் அவர் கத்தினார்.

"நான் ஒனக்கு அப்பனும் இல்ல. நீ எனக்கு மகளும் இல்ல. ஏதோ பெத்த கடமைக்கு பொண்ணுக்குத் தோழியா வாரேன். இந்த வீட்ல நீ இனிமேல் இருக்க முடியாது. இது மானஸ்தனுக்குப் பிறந்த மானஸ்தன் வீடு. உம். நட. நட."

கோலவடிவு நடக்க மறுத்தாள். பழனிச்சாமி விடவில்லை. சண்டித்தனம் செய்யும் மாட்டை இழுப்பது போல், அவள் கையை, விட்டுவிட்டுக் கழுத்தைப் பிடித்து இழுத்தார். அவள் கால்கள், தரையில் சாய்ந்த கோபுரம் போல் கோடுகள் போட, அவள் உடம்பு அவர் இழுத்த இழுப்பிற்கு நகர்ந்தது. அங்கே இருந்த எல்லோருக்கும், பழனிச்சாமியிடம் ஏதோ சொல்லவேண்டும் என்ற எண்ணம். என்ன சொல்ல முடியும். போனால் போகுது. இங்கே அவள் இருக்கட்டும் என்று சொல்ல முடியுமா.. என்னத்தைச் சொல்ல.

கரும்பட்டையான்கள் கைகளை நெறித்தபோது, பழனிச்சாமி, மகள் கழுத்தை நெறிக்காத குறையாக, இழுத்துக் கொண்டு போனார். இருவரும் அந்த வீட்டை விட்டு மறையப் போகும்போது, திண்ணையில் கிடந்த அம்மாவின் கைகால்கள் வெட்டின. "ஊ. ஊ." என்ற அலறல் சத்தம் ஒலித்தது.

பழனிச்சாமி, மகளை இழுத்துக் கொண்டு, பாதி வழி வந்துவிட்டார். வீட்டு வாசல்களில் இருந்தும், மாடிகளிலிருந்தும், ஊரார் உன்னிப்பாகப் பார்த்தார்கள். செம்பட்டையான் குடும்பத்தினரிடம் கூட, இப்போது அனுதாபம், அகங்காரத்தை விரட்டியது. பழனிச்சாமிக்கும் இளைத்தது. அதற்குமேல், மாடாகப் போன அந்த மகளை அவரால் இழுக்க முடியவில்லை. கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/298&oldid=1244159" இலிருந்து மீள்விக்கப்பட்டது