பக்கம்:சாமியாடிகள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

297

சாமியாடிகள் 297

வலித்தது. மனம் கனத்தது. கால்கள் இளைத்தன. இதைவிட எல்லாக் கண்களும் அவரை மொய்த்தன. நடக்க மாட்டேன் என்பது போல் கால்களை, தரையில் மடித்துப் போட்டபடி அப்பாவின், கைக்குள் கழுத்தைக் கொடுத்துவிட்டு, பைசா நகரக் கோபுரம் போல் சரிந்து கிடந்த கோலவடிவை அவர் நிமிர்த்தினார். அங்க ஓடத் தெரிஞ்சுது. இங்க நடக்கத் தெரியலியோ...' என்று கத்தியபடியே, அவள் தலைமுடியைப் பிடித்து சுற்றி வளைத்து, அவளைப் பம்பரமாகச் சுற்றினார். கோலவடிவு பேசுவதுபோல் முனங்கினாள். பழனிச்சாமி கத்தினார்.

"நீ என்னத்தழா பெரிசா சொல்லப் போறே. நீ என்ன பண்டமா. பாத்திரமா. தவலையா. தட்டா. கிண்ணமா. செம்பா... எச்சுபாத்திருமுன்னு சாம்பல வச்சு விளக்கி, வைக்கதுக்கு நடழா. எச்சிக்கல நாயே. நட."

கோலவடிவு இப்போது சுரணையற்றுப் போனாள். நடப்பது நடக்கட்டும் என்பதுபோல் நடக்காமல் நின்றாள். ஆகாயத்தைத் துழாவிப் பார்த்து, அந்த வேகத்தில் பூமியைக் குடைந்து பார்த்து, கூன்பட்டு நின்றாள். பழனிச்சாமி விடவில்லை. அவளுக்குப் பின்னால் வந்து, அவள் தோளில் தன் கரங்கள் இரண்டையும் அணை கொடுத்துத் தள்ளினார். அப்படியும், அவள் உடல்தான் சாயப் போனதே தவிர, கால்கள் நகரவில்லை. நகராத மாட்டையும் நடக்க வைத்துப் பழக்கப்பட்ட பழனிச்சாமி, தனது கால்களால் அவளது கால்களை முன்னால் தள்ளித் தள்ளி விட்டார். வலது கையில் இருந்து டிரங்க் பெட்டியை தோளில் போட்டு, கழுத்தால் அதை கொக்கிபோட்டுத் தக்க வைத்துக் கொண்டு அவளைத் தள்ளினார். அவளோ கூந்தல் கலைய, சேலை விலக, கண்ணாடி வளையல்கள் சிதறல்களாக, தந்தையின் தள்ளிய வேகத்திற்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தாள். துளசிங்கம் வீட்டருக்கே போனபோது, அந்த வீட்டுக்குப் போக விரும்பாதவள் போல், அவள் வேறு பக்கமாக உடம்பைச் சாய்த்தபோது, பழனிச்சாமி, தன் தலையால், அவள் உடம்பிற்கு அணை கொடுத்து, அவளைத் திருப்பினார். துளசிங்கம் வீட்டை நோக்கி நகர்த்தினார். அவள் பின்னால் சாயப்போனபோது, அவளை முன்னுக்குத் தள்ளி, தாளம் போட்டுப் பேசினார்.

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/299&oldid=1244161" இலிருந்து மீள்விக்கப்பட்டது