பக்கம்:சாமியாடிகள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

சு. சமுத்திரம்

298 சு. சமுத்திரம்

"நான் ஒங்கள அடிக்கப் படாதும்மா... இப்போ நீங்க இன்னொருத்தன் பொருளும்மா. மரியாதையா நடங்கம்மா. வந்தாச்சு. எட்டே எட்டுத்தான். எனக்கு எட்டாத எட்டு. நடங்கம்மா."

37

பழனிச்சாமி, கோலவடிவைத் தன் மார்போடு சேர்த்து துளசிங்கம் வீட்டிற்குள் நுழைந்தபோது, அங்கே கூடியிருந்தவர்கள் திகைத்து போனார்கள். ஒருவர் என்னய்யா நெனச்சே என்று ஆவேசப்பட்ட எலி டாக்டரை பிடித்துக் கொண்டார். சுத்தப்படுத்தப்பட்ட மாட்டுத் தொழுவில் நான்கைந்து கோவில் ஆடுகள் அங்கே தலைகளும், முண்டங்களுமாகக் கிடந்தன. கால்படி பொங்கல் சோறு, ரெண்டு வாழைப்பழம், கால் தேங்காய், ஆகியவற்றுடன், ஆட்டிறைச்சி சம அளவில் வைக்கப்பட்டன. மொத்தம் அறுபது பங்குகள். இனிமேல் ஆட்டுத் தலைகளை ஏலம் போடுவார்கள். அதுவரைக்கும் அங்கிருந்த பெண்களும், பிள்ளைகளும் அங்கேயே கிடப்பார்கள். பங்குகள் குறைந்திடப்படாதே. அழுகுன வாழைப்பழத்தை நொறுக்குன தேங்காயோட வச்சுடப்படாதே.

கோலவடிவின் கோலத்தைப் பார்த்து பதைத்தவர்கள் பலர்; பகைத்தவர்கள் சிலர். என்ன பேசுவது என்று தெரியாமல், திகைத்தவர்கள் ஒருசிலர். பழனிச்சாமி மகளை ஒரு கிடாத்தலை இருந்த இடத்திற்கு முன்னால் நிறுத்தியபடியே வாயுருக பேசினார்.

"தர்மப் பிரபுக்களே. இனிமேல் இவள் உங்களோட சொத்து நா யார் சொத்துக்கும் ஆசப்படுறவன் இல்லை என்கிறது ஒங்களுக்கே தெரியும். துளசிங்கத்தோட இந்த சொத்த நீங்க விப்பியளோ. வைப்பியளோ. விறகா எரிப்பியளோ. ஒங்க இஷ்டம். நான் தலையிடமாட்டேன். நான் யார் தலையிட? போயிட்டு வாறேன். தப்புத் தப்பு போறேன். ஒரே வழியாய் போறேன். புண்ணியவான்களே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/300&oldid=1244163" இலிருந்து மீள்விக்கப்பட்டது