பக்கம்:சாமியாடிகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

299

சாமியாடிகள் 299

பழனிச்சாமி மகளை ஏறிட்டுப் பார்க்காமலே, குனிந்த தலை நிமிராமல், பேசிய வாய் மூடாமல் பேய்ப் பாய்ச்சலில் நடந்தார். கோலவடிவு, எங்கு நிற்கோம் என்ற உணர்வு இல்லாமல் அப்படியே நின்றாள். ஏதோ ஒரு பொம்மைக்கு கலர் அடிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதுபோல் நின்றாள். கண்கள் வெளுத்துப் பார்த்தன. எதையோ கேட்ட வெறுமையில் காதுகள் சிலிர்த்து நின்றன. தலையோ தாழ்ந்து போனது. அதோ வெட்டப்பட்டுக் கிடக்குதே ஆடு. அதன் தலையை பொருத்தி, செங்குத்தாய் நிறுத்திப் பிடித்தால் எப்படியோ அப்படி நின்றாள். எவரும் பிடிக்காமல், அவளும் கீழே விழாமல், அப்படி நின்றது ஆச்சரியந்தான். அதிசயந்தான்.

செம்பட்டையான் கூட்டத்தினருக்கு, இப்போது அங்கே நடந்த சம்பவத்தின் முழுத் தாத்பரியம் மெள்ள மெள்ளப் புரிந்தது. மாமிசப் பங்குகளை சரிபார்த்த, அந்தக் கண்கள், அந்த நரமாமிச உணவை நைந்து பார்த்தன. நையாண்டியாப் பார்த்தன. நமக்கும் பெண்ணிருக்கே என்று பயந்து பார்த்தன. நமக்கென்ன என்று பட்டும் படாமலும் பார்த்தன. 'என் வீட்டு ஆடுகளை அறுக்கிறதுனால் ஒரு ஆட்டுத்தல எனக்கு இனாம் வேணும் என்று கேட்பதற்கு, கால நேரம் பார்த்துக் கொண்டிருந்த துளசிங்கத்தின் அப்பா, எலி டாக்டர் கோலவடிவின் அருகே வந்தார்.

"ஒப்பன்தான். அறிவில்லாமல் கூட்டி வந்தான். நீ எப்படி இங்கே வரலாம்? அந்தப் பயல கூட்டிட்டு ஒடும்போது என்கிட்ட சொல்லிட்டா ஒடின. அந்த பயலே எனக்கு சம்பந்தம் இல்ல. நீ எப்படி சம்பந்தமாவும்? திரும்பி நட. திரும்பி பாராமல் நட."

கோலவடிவு, பேசாமல் அங்கேயே நின்றாள். எங்கே நிற்கிறோம் என்பது தெரியாமல் எங்கேயோ நிற்பதுபோல் நின்றாள். இதை எதிர்ப்பாகக் கருதிய எலி டாக்டர், அந்த எதிர்ப்பை முறியடிக்கும் குறி, அவள் முதுகில் இருப்பதுபோல், அவளை உற்றுப் பார்த்துவிட்டு, பிறகு அவள் முதுகைப் பிடித்து தள்ளினார். கீழே விழப் போனவளை, முடியைப் பிடித்து நிறுத்தினார். அவள் அசையாமல் நிற்பதைப் பார்த்துவிட்டு, அவள் கையைப் பிடித்து இழுத்தார். இழுத்துக் கொண்டே நடந்தார். இவரது கையைவிட, அவளது கை மிக வலுவாக இருந்ததால், அவர், கைகளை விட்டுவிட்டு, பின்னால் கிடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/301&oldid=1244164" இலிருந்து மீள்விக்கப்பட்டது