பக்கம்:சாமியாடிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

சு. சமுத்திரம்

28 சு. சமுத்திரம்

திருமலை வெட்டரிவாள் கையோடும், மண்வெட்டித் தோளோடும் துளசிங்கம் நின்ற இடத்தை நோக்கி நடந்தான். அவனோ, இவன் ஒரு தூசி என்பது போல், அலட்டிக்காமல் நின்றான். இப்போது இருந்த பெண்கள் கூட எழுந்து விட்டார்கள். சிலர் இருவருக்கும் இடையே போய் நிற்கப் போனார்கள். பிறகு, திருமலை கவிழ்த்திப் பிடித்த வெட்டரிவாளை நிமிர்த்திப் பிடிப்பதைப் பார்த்துவிட்டு, நடுங்கிப்போய் நின்றார்கள். ஒருத்தி ஊரில் போய்ச் சொல்லலாம் என்பதுபோல் இன்னொருத்தியைப் பிடித்திழுத்தாள்.

துளசிங்கத்தை நெருங்கிய திருமலை, போர்ப்பரணி பாடினான். "ஒன் மனசுல. என்னடா நெனப்பு.?" "அனாவசியமாய் பேசாதடா. ஒன்னால ஆனதைப் பாருடா..."

"என் தங்கச்சிய அவமானமாப் பேகனதுமில்லாம திமுறா ஒனக்கு."

"பாசத்துக்கு அடிமையாகிறவன் பைத்தியக்காரன். ஒனக்குப் பதில் சொல்லி என்னை அவமானப்படுத்த நான் விரும்பல. ஒன்னால் ஆனதைப் பாரு. முதல் அடி ஒன் அடியாவே இருக்கட்டும்."

திருமலைக்கு அவன் மூளை ஆணையிடாமல், கையில் இருந்த அரிவாள் ஆணையிடத் துவங்கியது. அவன் வலது கையால் அரிவாளைத் தூக்கிப் பிடித்து, இடது கையில் துளசிங்கத்தின் தோளைத் தொடப்போனான். துளசிங்கம் சற்றே விலகி, சினிமாப் பாணியில் சட்டையைக் கழட்டி, அதை திருமலையில் முகத்தில் வீசி, அரிவாளை மறைத்து, அவனை திசையறியாமல், திக்கு முக்காடாய் செய்யப்போனான். இதற்குள், அலங்காரி, திருமலைக்கு முன்னால் வந்து அவனைக் கையெடுத்துக் கும்பிட்டாள். மற்றப் பெண்களும், அந்தச் சமயத்தில், இருவருக்கும் இடையே உள்ள சின்ன இடைவெளியை இட்டு நிரப்பினார்கள். கோலவடிவு, அழப்போனாள். அங்கே ஒடிப்போய் அண்ணனைத் தடுக்கப் போனாள். ஆனால் 'பயமில்லாத சந்திரா, வடிவை புல்லுக்கட்டைப் பிடிப்பதுபோல் தூக்கிப் பிடித்தாள். அலங்காரி, கும்பிட்ட கையை நிமிர்த்தாமலே, திருமலையிடம் கெஞ்சினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/30&oldid=1243305" இலிருந்து மீள்விக்கப்பட்டது