பக்கம்:சாமியாடிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

29

சாமியாடிகள் 29

"சாமி சத்தியமாய் சொல்லுதேன். ராசா. இந்த துளசிங்கம் பயல். அத்தை மகளாச்சேன்னு சொம்மா விளையாட்டுக்குத்தான் சொன்னான். இந்தச் சந்திராவால இப்டி வினையாகுமுன்னு நெனச்சா. அவன் சொல்லியிருக்கவே மர்ட்டான். அத்தப் பெண்ண கிண்டலா பேசுறது. மாமா மவனுவ எல்லாரும் செய்யுறதுதான. மணி. இதுக்குப் போயி..."

"இந்தப் பயலோட அப்பா.. எனக்கு மாமா மொறதான் வேணும். இதனால் இவன் தங்கச்சி புஷ்பமும், எனக்கு மாமா பொண்ணுதான். அதுக்குன்னு அவளப் போயி. நான் தூக்கிட்டு வரட்டுமா. இல்ல வயலு வரப்புக்கு போவும்போது, நானே அவளோட இடையில கையப்

גל

போட்டு டான்ஸ் ஆடலாமா. எதுக்கும் ஒரு வரைமுறை இருக்குல்லா

"துளசிங்கத்துக்காவ நான் மன்னாப்பு கேட்டுக்கிறேன். ராசா. கொஞ்சம் பின்னால போப்பா."

அலங்காரி திருமலையைச் செல்லமாகப் பின்னுக்குத் தள்ளினபோது, துளசிங்கம் சிறிது முன்னுக்கு வந்து சூளுரைத்தான்.

"நீ ஏன் சித்தி மன்னிப்புக் கேக்கே இந்தாப்பா. திருமலை. ஒன்னால என்ன செய்ய முடியுமோ.. அதச் செய். நாம ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துல ஒண்ணாப் படிச்சோமேன்னு சும்மா இருக்கேன். இல்லாட்டா இந்நேரம்."

"ஒகோ. அய்யா. என்னை புண்ணியத்துக்குத்தான் விட்டு வச்சிருக்கியோ. அதையும் பாத்துடலாம்."

அலங்காரியால் ஒரளவு சமாதானப்பட்டுத் தணிந்த திருமலை, இப்போது அனல் கட்டையில் பிடித்த தீபோல் பீறிட்டு, அவளை ஒரு பக்கமாகத் தள்ளி விட்டுவிட்டு துளசிங்கத்தை நெருங்கினாள். அரிவாள் கையில் இருந்தாலும், அதனால் அவனை வெட்டத் தயங்கினான் திருமலை, துளசிங்கம் தொலைவில் சென்று, ஒரு பெரிய கருங்கல்லைத் தூக்கி வைத்துக் கொண்டு நின்றான். இவன் அவன் கழுத்துக்கும், அவன் இவன் தலைக்கும் ஒருவரை ஒருவர் நெருங்காமலே குறி வைத்தார்கள். எல்லாப் பெண்களும், "எம்மோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/31&oldid=1243306" இலிருந்து மீள்விக்கப்பட்டது