பக்கம்:சாமியாடிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

சு. சமுத்திரம்

30 சு. சமுத்திரம்

எம்மோ" என்று கூக்குரலிட்டு அந்த இருவரையுமே சுற்றிச் சுற்றி வந்தார்கள். காகங்கள் கத்தின. குருவிகள் கீச்கீச் என்றன. சந்திராவுக்கும், பயமெடுத்துக் கைகால் உதறியது. அந்தச் சமயத்தில், சந்திராவின் பிடியில் இருந்த கோலவடிவு அவளை உதறிவிட்டு ஒடி வந்தாள். பெண்கள் வட்டத்தில் இரண்டு பெண்களை இரண்டு கைகளாலும் தள்ளிவிட்டபடியே, அண்ணனுக்கு அரணாக நிற்பதுபோல், அவன் பக்கமாகத் திரும்பினாள். அப்படியும், அவன் தலை மறையாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, குதிகாலில் நின்றபடி, அண்ணனின் தலையில் தனது கையைப் பரப்பி மறைத்தாள். துளசிங்கத்தை அலங்காரி பிடித்துக் கொண்டாள். அவன் கையையும், அது பிடித்த கல்லையும் கீழே இழுத்தாள்.

முத்தம்மா, ரெண்டு குடும்பங்களையும் சேராதவள். ஆகையால், தான் பேசுவதே நியாயம் என்று நம்பி, அடித் தொண்டையில் குரலிட்டாள்.

"திருமலை அண்ணாச்சி. நீ நடந்ததை தீர விசாரிக்காம அடிக்கப் போறதும் தப்பு. துளசிங்கம். அண்ணாச்சி. நீ நடந்ததைச் சொல்லாததும் தப்பு. எல்லாத்தையும் விட பெரிய தப்பு. இந்தப் பக்கம் ஆம்புளையள இருக்க விடுறது."

அலங்காரியும் அரசியல்வாதியானாள்.

"ரெண்டு பேருமே மாமா மச்சான். ஒண்ணுக்குள்ள ஒண்ணு. கண்ணுக்குள்ள கண்ணு. ஒரு கண்ணு இன்னொரு கண்ணை முறைச்சா எப்டி. ஒரு கையி இன்னொரு கைய அடிச்சா எப்டி. ஒரு காலு. இன்னொரு கால உதச்சா எப்டி.."

அலங்காரி இப்படியே பேசிக் கொண்டே போயிருப்பாள். ஆனால், சந்திராவால் பொறுக்க முடியவில்லை. கோலவடிவக்காவை, அலங்காரி அப்படி விமர்சனம் செய்ததையும், துளசிங்கம் அப்படி அந்த விமர்சனத்திற்கு அழுத்தம் செய்ததையும், திருமலை தப்பு என்று ஏற்றுக் கொண்டு சண்டைக்குப் போனதால், தான் தப்பாகச் சொல்லவில்லை என்று சந்திரா நினைத்தாள். அதோடு திருமலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/32&oldid=1243307" இலிருந்து மீள்விக்கப்பட்டது