பக்கம்:சாமியாடிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

31

சாமியாடிகள் 31

அண்ணன், துளசிங்கத்தை அடிக்காமல் போய் விடுவானோ என்ற சந்தேகம். அவன் துளசிங்கத்தைச் ஜெயித்தால்தான், தான் அலங்காரியைத் தோற்கடித்ததற்குச் சமம் என்று நினைத்தாள். இத்துடன் அவள் உடம்பில் ஒடிய இயல்பான கரும்பட்டையான் ரத்தம் கொதித்தது. கொஞ்ச நஞ்ச அமைதியை குரோதச் சூறாவளியாய் மாற்றப் போனாள்.

"எண்ணா. நான்தான் பெரிய வீராதிவீரன்னு இவனுக்கு நெனப்பு. இந்த ஊரில எவனை வேணுமுன்னாலும் என்கிட்டே வரச் சொல்லுன்னு சவடால் அடிக்கான்."

திருமலை துளசிங்கத்தை மீண்டும் பகையாக்கிப் பார்த்தான். அவள் அப்படிச் சொன்னது, இவனையே சவாலுக்குக் கூப்பிடுவது போல் தோன்றியது. அரிவாளை எடுத்துக் கீழே எறிந்தான். மண்வெட்டியைத் தூக்கிக் கீழே போட்டான். வெற்றுடம்புடன் துளசிங்கத்தை முறைத்தபடியே சவாலிட்டான்.

"சினிமாவுல ஒருத்தன வீரனாக காட்டுறதுக்காவ. இருபது பேரை தெம்மாடியாய் காட்டிக் காட்டி, சினிமாக்காரனுவ நம்மை நாட்டையே கெடுத்துப்புட்டானுவ. இந்த இடம் சினிமா எடுக்கிற இடம் இல்ல. எங்க கரும்பட்டையான் வம்சத்து மூதாதையர் இளவட்டக் கல்லு துக்குன இடம். சிலம்பாடுன பூமி. வாறியா. ஒத்தைக்கு ஒத்தையா போட்டுப் பார்க்கலாம்."

"சரி. போட்டுப் பாத்துடலாம். சினிமாவுல சண்டை கத்துக் கிட்டதால சொல்லல. எங்க செம்பட்டையான் குடும்பத்து ரத்தம் இந்த உடம்புல ஒடுறதால. சொல்லுறேன். எப்போ வச்சுக்கலாம். எந்தக் கிழமையில வச்சுக்கலாம்."

"எப்போ என்ன எப்போ. இப்போ வச்சுக்கலாம். நாளும் கிழமையும் பேடிப் பயலுக்குத்தான்."

"யாருடா பேடி.."

"வேறயாரு. நீதான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/33&oldid=1243308" இலிருந்து மீள்விக்கப்பட்டது