பக்கம்:சாமியாடிகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

சு. சமுத்திரம்

32 க. சமுத்திரம்

இருவரும் மீண்டும் மோதப் போனார்கள். இதற்கிடையே ஒரு இளம்பெண் ஒடோடி வந்தாள். அருகே இருந்த பருத்திக் காட்டில் இருந்து பாய்ந்து வந்தாள். திருமலையின் முன்னால் போய் நின்று, "ஒரு அடி நகர்ந்திரு. அப்புறம் தெரியும் சேதி” என்று எச்சரித்தாள்.

எல்லோரும், வாராதது போல் வந்த அந்தப் பெண்ணையே பார்த்தார்கள். மாம்பழச் சிவப்பு. தக்காளி நிறப் புடவை. நாகப்பழக் கண்கள். அழுத்தம் திருத்தமான பார்வை. அனாவசியமான தோரணை, துள்ளும் கன்றுக்குட்டி மாதிரியான லாவகம். தன்னை மீறி எதுவும் நடந்துவிட முடியாது என்பது போன்ற குறுஞ்சிரிப்பு. அவள் தலையை ஆட்டி ஆட்டிப் பேசும்போது, கண்கள் ஊஞ்சலாட, கம்மல்கள் வெளிச்சம்போட, இன்னதென்று சொல்ல முடியாத அதே சமயம் எல்லோராலும் இனங்காணக்கூடிய கவர்ச்சிக்காரி பிடித் தட்டை குழந்தையைச் சுமப்பதுபோல் இடுப்பில் வைத்து பிடித்தபடி ஒயிலாக நின்றாள்.

அவளையே பார்த்த பெண்கள், அந்த நேரத்திற்குள் அந்தத் தடியன்கள் இருவரும் ஏதாவது செய்துவிடப்படாதே என்பதுபோல், அவர்களையும் பார்த்தார்கள். அவன்களோ, இவள்கள் தங்களைப் பார்த்தால்தான் சண்டை வரும் என்பதுபோல், முன் வைத்த கால்களை பின் வாங்காமல், அதே சமயம் உடம்புகளைப் பின்னிழுத்த படி நின்றார்கள். திருமலை, பத்திரகாளி வந்ததும் கோபம் தணிந்த வீரபத்திர சாமி போல, துளசிங்கத்தை முறைத்த கண்களை, அவள் மேல் போட்டபடியே பேசினான்.

"நீ இதுல தலையிடாதே ரஞ்சிதம். இந்தப் பய என் தங்கச்சி கோலவடிவ அவமானமாய் பேசியிருக்கான்."

"அப்டி என்ன பேசிட்டார்."

"என் தங்கச்சி சினிமாவுல கதாநாயகியாய் நடிக்கலாமாம். தமிழுக்கு தமிழ் கதாநாயகியாம். இங்கிலீசுக்கு இங்கிலீசு கதாநாயகியாம்."

"எண்ணே. இங்லிஸ்னு சொல்லல. இந்தின்னு சொன்னான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/34&oldid=1243310" இலிருந்து மீள்விக்கப்பட்டது