பக்கம்:சாமியாடிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

33

சாமியாடிகள் 33

"ஒரு வயசுப் பொண்ணுகிட்ட பேசற பேச்சா இது. இவன நான் விடப் போறதில்ல. நீ பேசாம அந்தப் பக்கமா போ.”

"பொட்டப்பிள்ளியள கிண்டல் பண்ணுறவன விடப்படாதுன்னா, ஒம்மையும் விடப்படாது."

"நீ என்னே சொல்லுறே."

"நீரே. நெனச்சிப் பாரும்." "டேய் துளசிங்கம். இந்த ரஞ்சிதம் அடுத்த சாதிப் பொண்ணா

இருந்தாலும் நியாயம் பேசுறவள். அவள் முகத்துக்காவத்தான் நான் ஒன்னை விட்டு வைக்கேன்."

"இதே வார்த்தைய நானும் சொன்னதா நெனச்சுக்க."

"ஆனால் இனும ஒரு தடவ என் தங்கச்சியப் பத்தி அப்டிப் பேசினே. ஒன்னை விடப்போறதில்ல."

"எவண்டா இவன் கிறுக்கன். ஊருல எனக்கு என்ன வேற வேல வெட்டி இல்லியா..."

"சரி இதோட பேச்சை விடுங்க. மகனே துளசிங்கம் பழையபடி உட்காரு. மருமவனே திருமல. நீயும் உட்காரு. எப்பாடா எனக்கு இப்பதான் போன உயிரு திரும்ப வந்தது. ஏய் பொண்ணு ரஞ்சிதம், அது என்ன பிள்ள, நீரே நெனச்சிப் பாரும்."

"யார்கிட்ட சொன்னாலும் ஒங்ககிட்ட சொல்லுவேனா."

"சரி. லேசா விடுகதை மாதிரிச் சொல்லு."

"எம்மாடி நான் ஊரச் சொன்னால் பேரக் கண்டுபிடிப்பீக. பேரச் சொன்னால் ஊரைக் கண்டு பிடிப்பீக பொல்லாத ஆளாச்சே நீங்க."

"சும்மா பவுசு பண்ணாம சொல்லும்மா."

"என்னைக்குமே கைய மூடி வச்சாத்தான் மரியாதி. திறந்து காட்டினா வெறுங்கையுன்னு ஆயிடும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/35&oldid=1243312" இலிருந்து மீள்விக்கப்பட்டது