பக்கம்:சாமியாடிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

சு. சமுத்திரம்

34 சு. சமுத்திரம்

"எப்பா நீ கஷாயம் தட்டுற உாலையே கஷாயம் போட்டு குடிக்கிறவளாச்சே."

"குடிக்கிறதுன்னதும் ஞாபகம் வந்துட்டு. ஏய்யா துளசி. திருமலை. பெரிய வீராதிவிரங்க மாதிரி துள்ளுறிய. பட்டப்பகலுலே பட்டச்சாராயம் காய்ச்சி ஊரைக் கெடுக்கிறான் அந்த பெருமாள் சாமி. அவனைத் தட்டிக் கேட்கப்படாதா..."

"எங்க சாதி ஆம்புளைய அவன் இவன்னு பேசப்படாது.”

"ஓங்க சாதியா இருந்தாலும், எங்க சாதியா இருந்தாலும். எவன் காய்ச்சினாலும் குடி. குடியக் கெடுக்குமுல்லா. ஒங்க சாதி. எங்க சாதின்னு மனுஷங்களில இருக்கு. ஆனால் மனுஷனாய் இல்லாத இந்த பெருமாள்சாமி காய்ச்சுற கருவேலம்பட்டையில சாதி இல்ல. யார் எக்கேடு கெட்டாலும் தான் மட்டும் சம்பாதிக்கணும். என்கிற சாதிதான் இருக்குது."

எல்லாப் பெண்களும் ரஞ்சிதத்தை வியந்து பார்த்தார்கள். ஆணவம் இல்லாத தன்னம்பிக்கை. பிச்சைக்காரத்தனம் இல்லாத அடக்கம். வாயாடி என்றோ ஊமை என்றோ சொல்ல முடியாத அளவிற்கு வரம்புகட்டி நிற்பவள். அத்தனை பெண்களும் இயல்பு நிலைக்கு வந்தார்கள். கோலவடிவுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஆனால் சந்திரா அலங்காரியிடம் தோற்றுப் போனதாக நினைத்தாள். இந்த ரஞ்சிதத்தை ஜெயித்து, அந்தத் தோல்வியைச் சரிகட்டப் போவதுபோல் கேட்டாள்.

"எம்மாளு ரஞ்சிதம். எங்கண்ணாச்சிய தட்டிக் கேட்டது மாதிரி துளசிங்கம் மச்சானை ஏன் தட்டிக் கேக்கலே. எங்கண்ணாச்சின்னா இளக்காரமா."

"நீயே அவரத் தடுத்திருக்கணும். நீ செய்ய வேண்டியதத்தான் நான் செய்தேன்."

"இவளா. இவள். சும்மா கிடக்கிற சங்க ஊதிக்கெடுப்பா. நம்ம ரஞ்சிதம் மட்டும் வராட்டா. குத்துப்பழி வெட்டுப்பழி வந்திருக்கும். ஒனக்கென்ன. டவுன்ல ஆஸ்பத்திரியில அண்ணன் கிடந்தா. அவரப் பார்க்கிற சாக்குல டவுனுக்குப் போகலாமுன்னு நெனச்சிருப்பே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/36&oldid=1243313" இலிருந்து மீள்விக்கப்பட்டது